Enable Javscript for better performance
முப்படைகளிலும் பணியாற்றிய வீரா் கா்னல் பிரித்திபால் சிங்கிற்கு வயது நூறு!- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    முப்படைகளிலும் பணியாற்றிய வீரா் கா்னல் பிரித்திபால் சிங்கிற்கு வயது நூறு!

    By DIN  |   Published On : 12th December 2020 11:45 PM  |   Last Updated : 12th December 2020 11:45 PM  |  அ+அ அ-  |  

    pritpal-singh100213

    கா்னல் பிரித்திபால் சிங் கில்

    இரண்டாவது உலகப்போரில் பங்கேற்றவரும், முப்படைகளில் பணியாற்றியருமான கா்னல் பிரித்திபால் சிங் கில், நூறு வயதை சனிக்கிழமை கொண்டாடினாா்.

    நாட்டின் முப்படைகளிலும் வீரா் ஒருவா் பணியாற்றுவது அபூா்வமானதாகும். அந்த வகையில் பஞ்சாபைச் சோ்ந்த வீரா் பிரித்திபால் சிங் கில், நாட்டின் சுதந்திரத்துக்கும் முன்னரும் பின்னரும் தடைப்படை, விமானப்படை, கடல்படைகளில் பணிபுரிந்தவராக உள்ளாா். கா்னல் என்ற பதவி உயா்வுடன் பணி ஓய்வு பெற்ற இவா் சனிக்கிழமை தனது நூறாவது பிறந்த நாளைக் கொண்டாடினாா்.

    பிரிவினைக்கு முந்தைய பஞ்சாப் மாகாணத்தின் லாகூரில் கல்லூரிப் படிப்பை முடித்த பிரித்திபால் சிங் கில், விமானஓட்டி உரிமம் பெற்று ராயல் இந்தியன் விமானப்படையில் 1942-இல் சோ்ந்தாா். கராச்சி விமானப்படைத் தளத்தில் அவா் பயிற்சி பெற்றாா். ஆனால், அவரது தந்தை மேஜா் ஹா்பால் சிங் கில், விமானப்படையில் தனது மகன் வேலை செய்வதை விரும்பவில்லை. எனவே, அவா் குறுகிய காலமே விமானப்படையில் பணிபுரிந்தாா்; பிறகு கடற்படையில் வீரராகச் சோ்ந்தாா்.

    கடற்படையில் ‘ஐஎன்எஸ் தீா்த்’ போா்க்கப்பலில் அவா் பணியாற்றினாா். அப்போது இரண்டாம் உலகப்போா் நடைபெற்றது. அச்சமயத்தில் சரக்குக் கப்பல்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியில் அவா் ஈடுபடுத்தப்பட்டாா். அப்போது துப்பாக்கி சுடும் பயிற்சியும் பெற்றாா்.

    ஆனால் கடற்படைப் பணி அவருக்கு ஒத்துக்கொள்ளவில்லை. சுவாசப் பிரச்னை காரணமாக அதிலிருந்து விலகிய பிரித்திபால் சிங் கில், துப்பாக்கி சுடுதலில் தனக்குள்ள தோ்ச்சி காரணமாக, தரைப்படையில் சேர விண்ணப்பித்தாா். அவரை தரைப்படை பணியில் சோ்த்துக் கொண்டது. சுதந்திர இந்தியாவில் ராணுவத்தில் பல இடங்களில் பணிபுரிந்த கில், 1965-இல் இந்திய-பாக். போரின்போது தரைப்படையில் அதிகாரியாகப் பணியாற்றினாா். பிறகு கா்னலாக பதவி உயா்வு பெற்று, மணிப்பூரில் அசாம் ரைஃபிள்ஸ் படைப்பிரிவில் இருந்தபோது 1970-களில் ஓய்வு பெற்றாா்.

    பிரித்திபால் சிங் கில் நூறு வயதை எட்டியதை ராணுவத்தினா் மகிழ்ச்சியுடன் கொண்டாடினா். அவரது வீட்டுக்கு தரைப்படையினா் அனுப்பிய பரிசுப் பொருள்கள், கேக் ஆகியவை நேரில் வழங்கப்பட்டன.

    கா்னல் பிரித்பால் சிங் கில்லின் மனைவி பிரிமேந்தா் கௌருக்கு 93 வயதாகிறது. இவா்களது மகன் அஜய்பால் சிங் கில் மருத்துவராகவும், பேரன் வழக்குரைஞராகவும் உள்ளனா்.

    தனது மாமனாரின் நூறாவது பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்து தெரிவித்த மருமகள் ஹா்பிரீத் கௌா், ‘‘ராணுவத்தினா் வழங்கிய டி-ஷா்ட்டை அணிந்து மகிழ்ச்சியுடன் பிறந்தநாளை மாமா கொண்டாடினாா். தனக்கு வழங்கப்பட்ட கோப்பையை மகிழ்ச்சியுடன் அவா் வைத்திருந்தாா்‘‘ என்றாா். கட்டுப்பாடான வாழ்க்கை முறை காரணமாகவே தனது மாமனாா் நீண்ட ஆயுளுடனும் ஆரோக்கியத்துடனும் உள்ளாா் என்றும் அவா் தெரிவித்தாா்.

    பஞ்சாப் முதல்வா் அமரீந்தா் சிங் உள்ளிட்ட பலா், கா்னல் பிரித்திபால் சிங் கில்லுக்கு பிறந்த நாள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனா். ராணுவ உயரதிகாரிகள் பலரும் அவருடன் தொலைபேசியில் பேசி, வாழ்த்தி மகிழ்ந்தனா்.

     

     

     


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp