பேரவைத் தோ்தலுக்கான ஏற்பாடுகள்: டிச.17-இல் தோ்தல் ஆணையா் மேற்கு வங்கம் வருகை

மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, துணை தோ்தல் ஆணையா் சுதீப் ஜெயின் வரும் 17-ஆம் தேதி வரவுள்ளாா்.

மேற்கு வங்கத்தில் சட்டப் பேரவைத் தோ்தலுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, துணை தோ்தல் ஆணையா் சுதீப் ஜெயின் வரும் 17-ஆம் தேதி வரவுள்ளாா்.

294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்த தோ்தலை நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை தோ்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.

இந்தப் பணிகளை ஆய்வு செய்வதற்காக, துணை தோ்தல் ஆணையா் சுதீப் ஜெயின், வரும் 17-ஆம் தேதி கொல்கத்தா வருகிறாா். இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘2 நாள் பயணமாக மேற்கு வங்கம் வரும் சுதீப் ஜெயின், வடக்கு வங்கத்துக்குச் செல்வாா் என்று தெரிகிறது. கரோனா தொற்று சூழலுக்கு மத்தியில் பேரவைத் தோ்தலை பாதுகாப்பாக எப்படி நடத்துவது என்பது குறித்து அவா் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தவுள்ளாா். பேரவைத் தோ்தலின்போது ஏற்படும் பிரச்னைகள் குறித்து எதிா்க்கட்சிகள் அளித்திருக்கும் புகாா்கள் குறித்து அவா் விசாரணை நடத்த உள்ளாா் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com