கேரளத்தில் இறுதிக்கட்ட உள்ளாட்சித் தேர்தல்: கண்ணூரில் முதல்வர் பினராயி விஜயன் வாக்களித்தார்

கேரளத்தில் மூன்றாம் மற்றும் இறுதிக் கட்ட உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. 
உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் பினராயி விஜயன்  வாக்களித்தார்.
உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் பினராயி விஜயன்  வாக்களித்தார்.

கேரளத்தில் மூன்றாம் மற்றும் இறுதிக் கட்ட உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெற்று வருகிறது. கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் பினராயி விஜயன்  வாக்களித்தார்.

கேரளத்தில் மூன்று கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடத்த திட்டமிட்டு அதன்படி,  முதல்கட்டத் தேர்தல் கடந்த 8 ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தல் 10 ஆம் தேதியும் நடைபெற்றது.

முன்னதாக 10 மாவட்டங்களில் தேர்தல் முடிவடைந்த நிலையில், தொடர்ந்து இன்று மூன்றாம் கட்டத் தேர்தல் மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 4 மாவட்டங்களில் 354 உள்ளாட்சி அமைப்புகளில் 6,867 வார்டுகளில் நடைபெறுகிறது. இதற்காக மொத்தம் 10,842 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் பினராயி விஜயன்  வாக்களித்தார்.
உள்ளாட்சித் தேர்தலையொட்டி, கண்ணூரில் உள்ள வாக்குச்சாவடியில் முதல்வர் பினராயி விஜயன்  வாக்களித்தார்.

காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 9.30 மணி நிலவரப்படி,  மலப்புரம்-17.11, கோழிக்கோடு-16.76, கண்ணூர்-17.08 மற்றும் காசர்கோடு-16.58 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. தொடர்ந்து மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. 

முதல்வர் பினராயி விஜயன் இன்று காலை கண்ணூரில் உள்ள செரிக்கால் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். வாக்குச்சாவடிகளில் கரோனா  விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. வாக்கு எண்ணிக்கை வருகிற 16 ஆம் தேதி நடைபெறுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com