சூத்திரர்கள் மட்டுமே சூத்திரர்கள் என அழைத்தால் இழிவாக கருதுகிறார்கள்: பிரக்யா தாக்குர்

சூத்திரர்கள் மட்டுமே சாதியின் பெயரில் அழைத்தால் இழிவாக கருதுகிறார்கள் என பாஜக எம்.பி. பிரக்யா தாக்குர் தெரிவித்துள்ளார்.
பாஜக எம்.பி. பிரக்யா தாக்குர் (கோப்புப்படம்)
பாஜக எம்.பி. பிரக்யா தாக்குர் (கோப்புப்படம்)


சூத்திரர்கள் மட்டுமே சாதியின் பெயரில் அழைத்தால் இழிவாக கருதுகிறார்கள் என பாஜக எம்.பி. பிரக்யா தாக்குர் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைகளுக்குப் பெயர்போன பிரக்யா தாக்குர் சாதிகள் குறித்து தற்போது கூறியிருப்பது:

"சத்ரியர்களை நாம் சத்ரியர்கள் என்று அழைத்தால் அவர்கள் இழிவாக நினைக்க மாட்டார்கள். பிராமணர்களை நாம் பிராமணர்கள் என்று அழைத்தால் அவர்கள் இழிவாக நினைக்க மாட்டார்கள். வைசியர்களை நாம் வைசியர்கள் என்று அழைத்தால் அவர்கள் இழிவாக நினைக்க மாட்டார்கள். ஆனால், சூத்திரர்களை நாம் சூத்திரர்கள் என்று அழைத்தால் அவர்கள் இழிவாக கருதுகிறார்கள். என்ன காரணம்? ஏனென்றால் அவர்களுக்குப் புரிவதில்லை" என்றார்.

இதையடுத்து, பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டாவின் மேற்கு வங்க பயணத்தின்போது வாகனம் மீதான கல் வீச்சு தாக்குதல் தொடர்பாக பிரக்யா தாக்குர் தெரிவித்தது:

"இது பாகிஸ்தான் அல்ல, இந்தியா என்ற புரிதலுக்கு மம்தா பானர்ஜி வந்துள்ளார். ஹிந்துக்கள் நாட்டைப் பாதுகாக்க தயாராக உள்ளனர். அவர்கள் மம்தாவுக்கு தக்க பதிலடி கொடுப்பார்கள். மேற்கு வங்க பேரவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெறும். அங்கு ஹிந்து ராஜ்ஜியம் அமையும். தனது ஆட்சி முடிவுக்கு வருவதை எண்ணி மம்தா விரக்தியில் உள்ளார்."

இவர் ஏற்கெனவே மகாத்மா காந்தியை சுட்டுக்கொன்ற நாதுராம் கோட்சேவை தேச பக்தர் என்று மக்களவையிலேயே குறிப்பிட்டது மிகப் பெரிய சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com