கரோனா அச்சுறுத்தல்: நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ரத்து

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த மாதம் நடைபெற இருந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டிசம்பர் மாதம் நடைபெற இருந்த நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகள் போராட்டம் குறித்து விவாதிப்பது தொடர்பாக காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் அதிரஞ்சன் செளத்ரி எழுதிய கடிதத்திற்கு நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி பதிலளித்துள்ளார். அதில் கரோனா அச்சுறுத்தல் காரணமாக குளிர்காலக் கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக குளிர்காலக் கூட்டத்தொடர் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் முன்கூட்டியே நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com