போர் வீரர்கள் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

விஜய் திவஸ் தினத்தையொட்டி தில்லி போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். 
போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை
போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி மரியாதை

விஜய் திவஸ் தினத்தையொட்டி தில்லி போர் நினைவிடத்தில் பிரதமர் மோடி உயிர்நீத்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தினார். 

கடந்த 1971ம் ஆண்டு பாகிஸ்தானுடன் நடந்த போரில் இந்தியா வெற்றி பெற்றதைக் கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 16 ஆம் தேதி விஜய் திவஸ் கொண்டாடப்படுகிறது.

அந்த வகையில் இன்று விஜய் திவஸை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி தில்லியிலுள்ள போர் நினைவிடத்தில் உயிரிழந்த வீரர்களுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் வீரர்களின் நினைவு ஜோதியை ஏற்றி வைத்தார். மேலும் விஜய் திவஸை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகளும் நடத்தப்படவுள்ளன. 

இதுகுறித்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், 1971 ஆம் ஆண்டு யுத்தத்தில் நமது தேசத்திற்கு ஒரு தீர்க்கமான வெற்றியை ஏற்படுத்திய நம் ஆயுதப்படைகளின் அசைக்க முடியாத தைரியத்தை இந்நாளில் நினைவு கூர்கிறோம். இந்த சிறப்பு விஜய் திவஸில், தேசிய போர் நினைவுச் சின்னத்தில் ‘ஸ்வர்னிம் விஜய் மஷால்’ ஜோதியை ஏற்றியதில் பெருமைப்படுகிறேன்' என்று பதிவிட்டுள்ளார். 

நினைவு ஜோதியை ஏற்றும் பிரதமர் மோடி
நினைவு ஜோதியை ஏற்றும் பிரதமர் மோடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com