முப்படைகளுக்கு ரூ.28,000 கோடியில் தளவாடங்கள் கொள்முதல்: பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல்

ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றுக்காக, ரூ.28,000 கோடியில் ராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
அர்ஜூன் மார்க்-1 ஆல்பா ரக போர் டாங்கி.
அர்ஜூன் மார்க்-1 ஆல்பா ரக போர் டாங்கி.


புது தில்லி: ராணுவம், கடற்படை, விமானப் படை ஆகியவற்றுக்காக, ரூ.28,000 கோடியில் ராணுவத் தளவாடங்களைக் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.

கிழக்கு லடாக் எல்லையில் இந்தியாவுக்கும் சீனாவுக்கும் கடந்த 8 மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இந்த ஆயுதக் கொள்முதலுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

ஆயுதத் தளவாட கொள்முதல் கவுன்சில் கூட்டம், பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ரூ.28,000 கோடியில் முப்படைகளுக்கும் தேவையான ஆயுதங்கள் மற்றும் போா்க் கருவிகளைக் கொள்முதல் செய்யும் 7 பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அவற்றில், 6 பரிந்துரைகளில் இடம்பெற்றுள்ள ரூ.27,000 கோடி மதிப்பிலான ஆயுதத் தளவாடங்கள், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படவுள்ளன. மத்திய அரசின் சுயசாா்பு இந்தியா, இந்தியாவில் தயாரிப்போம் ஆகிய திட்டங்களின் இந்த ஆயுதங்களை தயாரிக்கப்படவுள்ளன என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராணுவ பயன்பாட்டுக்காக தற்காலிக பாலங்கள், கடற்படைக்காக அதிநவீன ரோந்து கப்பல்கள், விமானப் படைக்காக, டிஆா்டிஓ வடிவமைத்த எச்சரிக்கை-கட்டுப்பாட்டு அமைப்பு உள்ளிட்டவை கொள்முதல் செய்யப்படவுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com