ஆவடி: சரக்கு வாகனத்தில் மாடு திருடிய ஒருவர் கைது

ஆவடி பகுதியில் மாடு திருடிய நால்வரில ஒருவரை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். 
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆவடி பகுதியில் மாடு திருடிய நால்வரில ஒருவரை காவல்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். 
சென்னை, ஆவடி, கள்ளிக்குப்பம், பெருமாள் கோயில் தெருவில் வசித்து வருபவர் ராஜேஷ். இவர் தனது வீட்டின் அருகே பசு மாடுகளை வளர்த்து வருகிறார். இன்று அதிகாலை சுமார் 04.00 மணியளவில் மாடுகள் அலறும் சத்தம் கேட்வே ஓடி வந்து பார்த்தபோது, 4 நபர்கள், ராஜேஷின் மாட்டை சரக்கு வாகனத்தில் ஏற்றிக் கொண்டிருந்தனர். 
இதைகண்டு அதிர்ச்சியடைந்த ராஜேஷ் சத்தம் போடவே, 4 நபர்களும் ஓடி விட்டனர். உடனே இதுகுறித்து ஆவடி டேங்க் பாக்டரி காவல் நிலையத்துக்கு ராஜேஷ் புகார் அளித்தார். அதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தப்பியோடிய நபர்களில் ராஜேந்திரன் என்பவரை பிடித்து விசாரித்தனர். 
விசாரணையில், ராஜேந்திரனும் அவனது கூட்டாளிகளும் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து ராஜேந்திரனை கைதுசெய்த காவல்துறையினர் அவரிடமிருந்து சரக்கு வாகனம், 2 செல்போன்களை பறிமுதல் செய்ததோடு, பசு மாட்டையும் மீட்டனர். தப்பியோடிய ராஜேந்திரனின் கூட்டாளிகளை காவல் குழுவினர் தேடி வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com