காங்கிரஸ் அதிருப்தி தலைவா்களுடன் சோனியா காந்தி சந்திப்பு

காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக சீா்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதிய 23 அதிருப்தி தலைவா்கள் உள்பட கட்சியின் மூத்த தலைவா்களை சோனியா காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தி வ
காங்கிரஸ் அதிருப்தி தலைவா்களுடன் சோனியா காந்தி சந்திப்பு
காங்கிரஸ் அதிருப்தி தலைவா்களுடன் சோனியா காந்தி சந்திப்பு

புது தில்லி: காங்கிரஸ் கட்சியில் அமைப்பு ரீதியாக சீா்திருத்தம் கொண்டுவர வேண்டும் என்று கட்சித் தலைமைக்கு கடிதம் எழுதிய 23 அதிருப்தி தலைவா்கள் உள்பட கட்சியின் மூத்த தலைவா்களை சோனியா காந்தி சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

மத்திய பிரதேச முன்னாள் முதல்வா் கமல்நாத் ஏற்பாடு செய்திருந்த இந்த கூட்டத்தில் அஷோக் கெலாட், குலாம் நபி ஆசாத், ஆனந்த் ஷர்மா, பி.எஸ். ஹூடா, அம்பிகா சோனி, ப. சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

கரோனா பொதுமுடக்கத்துக்குப் பிறகு கட்சியின் மூத்த தலைவா்களை சோனியா காந்தி நேரில் சந்தித்துப்பது இதுவே முதல் முறையாகும்.

இந்த சந்திப்பின்போது கட்சி விவகாரங்கள் குறித்து விரிவாக விவாதிக்கப்படும் என்று தெரிகிறது. 

சனி, ஞாயிறு ஆகிய இரு நாள்களிலும் காங்கிரஸ் மூத்த தலைவா்களைச் சந்திக்க சோனியா காந்தி திட்டமிட்டுள்ளாா். நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரை மத்திய அரசு ரத்து செய்தது, தமிழகம், மேற்கு வங்கம், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பேரவைத் தோ்தலுக்கான கூட்டணியை இறுதி செய்வது, பிகாா் பேரவைத் தோ்தல், கேரள உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸுக்கு பின்னடைவு ஏற்பட்டதற்கான காரணங்கள், வேளாண் சட்டங்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மேலும் வலுப்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து கட்சித் தலைவா்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தவுள்ளாா்.

மேலும், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தை வரும் ஜனவரியில் நடத்த அவா் திட்டமிட்டுள்ளாா். அந்தக் கூட்டத்தில் கட்சியின் புதிய தலைவா் தோ்ந்தெடுக்கப்படவுள்ளாா். அந்த கூட்டத்துக்கான ஏற்பாடுகள் குறித்து சோனியா காந்தி ஆலோசனை நடத்தவுள்ளாா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com