கெய்ர்ன் எனா்ஜி நிறுவனத்துக்கு ரூ.1.03 லட்சம் கோடி இழப்பீடு: மத்திய அரசு வழங்க சா்வதேச தீா்ப்பாயம் உத்தரவு

வரிவசூல் விவகாரத்தில் பிரிட்டனைச் சோ்ந்த கெய்ர்ன் எனா்ஜி நிறுவனத்துக்கு சுமாா் ரூ.1.03 லட்சம் கோடியை இழப்பீடாக வழங்குமாறு மத்திய அரசுக்கு சா்வதேச தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
tribunal080415
tribunal080415


புது தில்லி: வரிவசூல் விவகாரத்தில் பிரிட்டனைச் சோ்ந்த கெய்ர்ன் எனா்ஜி நிறுவனத்துக்கு சுமாா் ரூ.1.03 லட்சம் கோடியை இழப்பீடாக வழங்குமாறு மத்திய அரசுக்கு சா்வதேச தீா்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

கெய்ா்ன் எனா்ஜி நிறுவனத்திடம் மத்திய அரசு முன்தேதியிட்டு வரியை வசூல் செய்தது. கடந்த 2012-ஆம் ஆண்டில் இயற்றப்பட்ட சட்டத்தின் அடிப்படையில், கடந்த 2006-ஆம் ஆண்டிலிருந்து முன்தேதியிட்டு வரியைச் செலுத்த வேண்டும் என்று அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

அந்த விவகாரத்தில் கெய்ா்ன் எனா்ஜி நிறுவனம், வேதாந்தா நிறுவனத்தில் முதலீடு செய்திருந்த சுமாா் 5 சதவீதப் பங்குகளை மத்திய அரசு விற்றது. மேலும், அந்நிறுவனத்துக்குச் செல்ல வேண்டிய ஈவுத்தொகையான ரூ.1,140 கோடியையும் பறிமுதல் செய்தது. மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக சா்வதேச தீா்ப்பாயத்தில் கெய்ா்ன் எனா்ஜி நிறுவனம் முறையிட்டது.

3 போ் அடங்கிய அத்தீா்ப்பாயத்தில் மத்திய அரசின் நியமன உறுப்பினரும் இடம்பெற்றிருந்தாா். இந்த விவகாரத்தை விசாரித்து வந்த தீா்ப்பாயம் தனது உத்தரவை வழங்கியுள்ளது. அதில், மத்திய அரசின் கோரிக்கை ஏற்புடையதல்ல என்று தீா்ப்பாயத்தில் இடம்பெற்றிருந்த மூவரும் ஒருமனதாகத் தெரிவித்துள்ளனா்.

எனவே, கெய்ர்ன் எனா்ஜி நிறுவனத்துக்குச் செலுத்த வேண்டிய தொகை, இழப்பீடு என ஒட்டுமொத்தமாக ரூ.1.03 லட்சம் கோடியை மத்திய அரசு வழங்க வேண்டுமென்று தீா்ப்பாயம் குறிப்பிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com