
ஆந்திருத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 36 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து ஜக்கையாபேட் உதவி ஆய்வாளர் கேவி ராமாராவ் தெரிவிக்கையில், விசாகப்பட்டினத்திலிருந்து 2 ஓட்டுநர்கள் உள்பட 43 பேருடன் தனியார் பேருந்து ஒன்று ஐதராபாத்தை நோக்கி இன்று புறப்பட்டது.
அதிகாலை 4.30 மணியளவில் ஹனுமஞ்சி பள்ளி கிராமம் அருகே பேருந்து சென்றுகொண்டிருந்தபோது கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஓட்டுநர் உள்பட 36 பேர் காயமடைந்தனர்.
உடனடியாக அவர்கள் அனைவரும் ஜக்கையாபேட் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் எலும்பு முறிவு ஏற்பட்ட 4 பேர் மேல் சிகிச்சைக்காக விஜயவாடாவில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர் என்றார்.
மேலும் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...