தில்லியில் முதல்கட்டமாக 51 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி: கேஜரிவால்

தில்லியில் முதல்கட்டமாக 51 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் (கோப்புப்படம்)
தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் (கோப்புப்படம்)

தில்லியில் முதல்கட்டமாக 51 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லியில் இது குறித்து மேலும் அவர் பேசியதாவது, ''கரோனா தடுப்பு மருந்தை பெறுவதற்கும், சேமித்து வைத்து முன்னுரிமை அடிப்படையில் விநியோகிப்பதற்கும் தில்லி அரசு தயாராகவுள்ளது.

தடுப்பு மருந்தை மக்களிடம் கொண்டு செல்வதற்கான பணிகள் முழுமையடைந்துள்ளன. குறிப்பிட்ட மூன்று பிரிவுகளில் முன்னுரிமை அடிப்படையில் கரோனா மருந்து பெறவேண்டிய மக்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

தில்லியில் முன்னுரிமை அடிப்படையில் முதல்கட்டமாக 51 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி வழங்கப்படுகிறது. 3 லட்சம் சுகாதாரத்துறை பணியாளர்கள், 6 லட்சம் முன்களப் பணியாளர்கள் மற்றும் 50 வயதிற்கு மேற்பட்ட 42 லட்சம் மக்களுக்கு முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படவுள்ளது.

ஒவ்வொரு நபருக்கும் இரு முறையாக பிரித்து கரோனா தடுப்பு மருந்து வழங்கப்படும். இதனால் முதல்கட்டமாக 1.02 கோடி எண்ணிக்கையிலான மருந்துகள் தேவையாகவுள்ளது.

இதில் 74 லட்சம் மருந்துகள் சேமித்து வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது 1.15 கோடியாக அதிகரிக்கப்படும். மேலும் முன்னுரிமைப் பட்டியலில் உள்ள நபர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் தகவல் அளிக்கப்படும்'' என்றும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com