
கோப்புப்படம்
அசாமில் இன்று மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது.
அசாம் மாநிலத்தின் நகோன் பகுதியில் இன்று காலை 6.56 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.0ஆக பதிவானதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தேஜ்பூரிலிருந்து 65 கிலோமீட்டர் தொலைவிலும் பூமிக்கடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்திலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.