" உரிமைகளுக்காக போராடும் நிலை துரதிருஷ்டவசமானது'

"விவசாயிகளுக்கு உரிய முறையில் மதிப்பளிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை; ஆனால், அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பபது துரதிருஷ்டவசமானது'  என்று

மும்பை: "விவசாயிகளுக்கு உரிய முறையில் மதிப்பளிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை; ஆனால், அவர்கள் தங்கள் உரிமைகளுக்காக போராட வேண்டிய நிலை ஏற்பட்டிருப்பபது துரதிருஷ்டவசமானது'  என்று தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சரத் பவார் கூறியுள்ளார்.
தேசிய விவசாயிகள் தினத்தை முன்னிட்டு, சரத் பவார் புதன்கிழமை வெளியிட்ட சுட்டுரைப் பதிவில் கூறியுள்ளதாவது:
வேளாண் சட்டங்களுக்கு எதிராக கடந்த நவம்பர் 26-ஆம் தேதி முதல் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் தில்லி எல்லைகளில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக விளங்கும் விவசாயிகளை உரிய முறையில் மதிக்க வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை; ஆனால், துரதிருஷ்டவசமாக விவசாயிகள் இப்போது தங்களது உரிமைகள், கோரிக்கைகளுக்காக போராட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
தேசிய விவசாயிகள் தினத்தையொட்டி, அவர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என விரும்புகிறேன் என்றார் அவர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com