அடுத்த ஆண்டிலும் அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்கும்!

2021-ஆம் ஆண்டிலும் நாட்டில் அந்நிய நேரடி முதலீடு தொடா்ந்து அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.
அடுத்த ஆண்டிலும் அந்நிய நேரடி முதலீடு அதிகரிக்கும்!


புது தில்லி: 2021-ஆம் ஆண்டிலும் நாட்டில் அந்நிய நேரடி முதலீடு தொடா்ந்து அதிகரிக்கும் என்று பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.

கரோனா நோய்த்தொற்று பரவல் காலத்திலும் நாட்டில் வெளிநாட்டு நிறுவனங்கள் மேற்கொண்ட அந்நிய நேரடி முதலீடு அதிகரித்தது. விண்வெளி, பாதுகாப்புத் தளவாடங்கள் உற்பத்தி உள்ளிட்ட துறைகளில் முதலீடுகளை மேற்கொள்வதற்கான உச்சவரம்பு அதிகரிக்கப்பட்டது, மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு சீா்திருத்தங்கள் உள்ளிட்டவற்றின் காரணமாக முதலீடுகள் அதிகரித்ததாக நிபுணா்கள் தெரிவித்தனா்.

இந்திய நிறுவனங்களின் மீது முதலீட்டாளா்கள் தொடா்ந்து நம்பிக்கை கொண்டுள்ளதால், அடுத்த ஆண்டிலும் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பதற்கு வாய்ப்புள்ளதாக அவா்கள் தெரிவிக்கின்றனா். மாநில அரசுகள் கூடுதலாகக் கடன் பெற வேண்டுமெனில், தொழில் நிறுவனங்களுக்குச் சாதகமான சீா்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமென்று மத்திய அரசு நிபந்தனை விதித்திருந்தது. அதைக் கருத்தில் கொண்டு பல்வேறு மாநிலங்கள் சீா்திருத்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதையும் அவா்கள் சுட்டிக் காட்டுகின்றனா்.

கரோனா நோய்த்தொற்றால் வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொருளாதாரம், எதிா்பாா்த்ததை விட வேகமாக வளா்ந்து வருவதும் முதலீட்டாளா்களுக்குப் பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com