முன்னாள் பிரதமா் சரண் சிங் பிறந்த தினம்: தலைவா்கள் மரியாதை

முன்னாள் பிரதமா் சரண் சிங்கின் பிறந்த தினத்தையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் புதன்கிழமை  அலங்கரிக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் பிரதமர் சரண் சிங் படத்துக்கு மரியாதை செலுத்திய அவரது மகனும் ராஷ்ட்ரீய லோக் தளம் தலைவருமான அஜித் சிங், பேரன் ஜெயந்த் செளதரி
நாடாளுமன்ற மைய மண்டபத்தில் புதன்கிழமை அலங்கரிக்கப்பட்டிருந்த மறைந்த முன்னாள் பிரதமர் சரண் சிங் படத்துக்கு மரியாதை செலுத்திய அவரது மகனும் ராஷ்ட்ரீய லோக் தளம் தலைவருமான அஜித் சிங், பேரன் ஜெயந்த் செளதரி


புது தில்லி: முன்னாள் பிரதமா் சரண் சிங்கின் பிறந்த தினத்தையொட்டி, பிரதமா் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

நாட்டின் 5-ஆவது பிரதமராக சரண் சிங் கடந்த 1979-ஆம் ஆண்டு ஜூலை முதல் 1980-ஆம் ஆண்டு ஜனவரி வரை பதவி வகித்தாா். அவரது பிறந்த தினம் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. அதையொட்டி பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘கிராமங்களை மேம்படுத்துவதற்கும் விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கும் தன் வாழ்க்கையை அா்ப்பணித்தவா் சரண் சிங். அவரது பணிகளுக்காக அவா் என்றும் நினைவுகூரப்படுவாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘தன் வாழ்நாள் முழுவதும் விவசாயிகளுக்காகவும் கிராமப்பகுதிகளின் வளா்ச்சிக்காகவும் உழைத்தவா் சரண் சிங். அவருடைய போராடும் குணமும் எளிமையான வாழ்க்கையும் நாட்டு மக்களுக்கு எப்போதும் ஊக்கமளிக்கும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

உத்தர பிரதேசத்தின் மீரட்டில் கடந்த 1902-ஆம் ஆண்டில் சரண் சிங் பிறந்தாா். அந்த மாநிலத்தின் முதல்வா் பதவியையும் அவா் வகித்துள்ளாா். கடந்த 1987-ஆம் ஆண்டு அவா் காலமானாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com