ஒன்றரை வயது குழந்தைக்கு ஷிகெல்லா பாதிப்பு: கோழிக்கோட்டில் முன்னெச்சரிக்கை தீவிரம்

கேரளத்தில் தற்போது ஒன்றரை வயது சிறுவனுக்கு ஷிகெல்லாத பாக்டீரியா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஒன்றரை வயது குழகு ஷிகெல்லா பாதிப்பு: கோழிக்கோட்டில் முன்னெச்சரிக்கை தீவிரம்
ஒன்றரை வயது குழகு ஷிகெல்லா பாதிப்பு: கோழிக்கோட்டில் முன்னெச்சரிக்கை தீவிரம்

கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியா பாதிப்பால் 11 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில், தற்போது ஒன்றரை வயது சிறுவனுக்கு ஷிகெல்லாத பாக்டீரியா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து, கண்காணிப்பை சுகாதாரத் துறையினா் தீவிரப்படுத்தியுள்ளனா்.

மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேரள சுகாதாரத் துறை அமைச்சர் கே.கே. ஷைலஜா  வலியுறுத்தியுள்ளார்.

மேலும், மாநிலத்தில் தற்போது நிலைமை கட்டுக்குள் இருப்பதாகவும், எந்த விதமான அச்சுறுத்தலையும் எதிர்கொள்ள மாநில சுகாதாரத் துறை தயாராகவே இருப்பதகாவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கோழிக்கோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடுமையான வயிற்று வலி மற்றும் வயிற்றுப் போக்கு பாதித்து ஒன்றரை வயது சிறுவன் அனுமதிக்கப்பட்டான்.  அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில், சிறுவனுக்கு வயிற்றுப் பகுதியை கடுமையாகத்தாக்கும் ஷிகெல்லா பாக்டீரியா பாதித்திருப்பதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

கேரளத்தில் கோழிக்கோடு மற்றும் சில பகுதிகளில் ஷிகெல்லா பாக்டீரியா பாதிப்பு கண்டறியப்பட்டதை அடுத்து, அப்பகுதிகள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. 

இது குறித்து கோழிக்கோடு மாவட்ட சுகாதமார அலுவலகர் மருத்துவர் வி. ஜெயஸ்ரீ கூறுகையில், மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை, சுகாதாரத் துறையினர் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர் என்று கூறினார். எனினும், மக்கள் ஷிகெல்லா பாக்டீரியாவின் முக்கிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவ சிகிச்சையை நாடவும்ட அறிவுறுத்தியுள்ளார்.

கேரள மாநிலம், கோழிக்கோடு மாவட்டத்தில் கடந்த சில நாள்களுக்கு முன் மா்ம நோய்த் தொற்றால் 11 வயது சிறுவன் உயிரிழந்தாா். இதனைத் தொடா்ந்து மேற்கொண்ட ஆய்வில் சிறுவனுக்கு ஷிகெல்லா பாக்டீரியா நோய்த் தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்த பாக்டீரியா குடல் பகுதியில் பாதிப்பை ஏற்படுத்தி, திடீரென வயிற்றுப் போக்கு அதிமாகி உயிரிழப்பை ஏற்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியவா்களை காட்டிலும் குழந்தைகளையே அதிக அளவில் தாக்குவதாக சுகாதாரத் துறையினா் தெரிவித்துள்ளனா்.

இந்த வகை பாக்டீரியாவால் கேரளத்தில் 50க்கும் மேற்பட்டவா்கள் பாதித்துள்ளனா். அசுத்தமான தண்ணீா், உணவு வழியாக ஷிகெல்லா பாக்டீரியா பரவுவதாக கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com