ஜனவரி 1 முதல் கர்நாடகத்தில் பள்ளி, பி.யூ. கல்லூரிகள் திறப்பு

கர்நாடகத்தில் பள்ளி, பி.யூ.கல்லூரிகள் திறக்கப்படும் என்று அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.
ஜனவரி 1 முதல் கர்நாடகத்தில் பள்ளி, பி.யூ. கல்லூரிகள் திறப்பு


பெங்களூரு: கர்நாடகத்தில் பள்ளி, பி.யூ.கல்லூரிகள் திறக்கப்படும் என்று அந்த மாநில கல்வித் துறை அமைச்சர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.
பெங்களூரில் புதன்கிழமை பி.யூ.கல்லூரிகளின் நிர்வாகக் குழு உறுப்பினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மாநிலத்தில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வந்த நிலையில், பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் புதிய வகை கரோனா தொற்று பரவி வருகிறது. அந்த நாடுகளிலிருந்து இந்தியா வருபவர்களால் புதிய கரோனா தொற்று பரவக்கூடும் என்ற அச்சம் நிலவி வருவது உண்மைதான். இருப்பினும், மாநிலத்தில் கரோனா தொற்றைத் தடுக்க வல்லுநர்கள் குழு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது. வல்லுநர்கள் அளித்துள்ள அறிக்கையைத் தொடர்ந்து ஜனவரி 1-ஆம் தேதிமுதல் பள்ளி, பி.யூ.கல்லூரிகளைத் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புதிய வகை கரோனா தொற்று தொடர்பாக யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஹர்ஷவர்தனும் தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்ப வல்லுநர்களின் அறிவுறுத்தலின்பேரில், ஜனவரி 1-ஆம்தேதி முதல் பள்ளிகளைத் திறந்து அதில் எஸ்.எஸ்.எல்.சி, பி.யூ.கல்லூரியில் மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 6,7,8,9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளிப்புறக் கல்வித் திட்டத்தின் (வித்யாகமா) மூலம் கல்வி பயில ஏற்பாடு செய்யப்படும்.
புதிய வகை கரோனா தொற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இன்னும் எந்தத் தகவலும் தெரியவில்லை. பள்ளி, பி.யூ.கல்லூரிகளைத் திறக்க இன்னும் 8 நாள்கள் உள்ளதால், தொழில்நுட்ப வல்லுநர்களின் அறிக்கையைத் தொடர்ந்து அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com