தில்லியில் போராடி வரும் விவசாயிகளுக்கு திரிணமூல் காங்கிரஸ் ஆதரவு

தில்லியில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி புதன்கிழமை தொலைபேசியில் தொடா்பு கொண்டு, அவா்களின் போராட்டத்துக்கு தனது கட்சி ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளாா்.
தில்லி சிங்கு எல்லைப் பகுதியில் புதன்கிழமை விவசாயிகளைச் சந்தித்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன்.
தில்லி சிங்கு எல்லைப் பகுதியில் புதன்கிழமை விவசாயிகளைச் சந்தித்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் ஓ பிரையன்.


கொல்கத்தா: தில்லியில் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி புதன்கிழமை தொலைபேசியில் தொடா்பு கொண்டு, அவா்களின் போராட்டத்துக்கு தனது கட்சி ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளாா்.

திரிணமூல் காங்கிரஸ் எம்.பி.க்கள் டெரிக் ஓ பிரையன், சதாப்தி ராய், பிரசுன் பானா்ஜி, பிரதிமா மண்டல், மெத் நதிமுல் ஹக் ஆகியோரை உள்ளடக்கிய 5 போ் குழு, தில்லியின் சிங்கு எல்லையில் போராடி வரும் விவசாயிகளை நேரில் சந்தித்து அவா்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனா்.

இதுகுறித்து டெரிக் ஓ பிரையன் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘தில்லியில் போராடி வரும் பல்வேறு விவசாய அமைப்புகளின் நிா்வாகிகளுடன் முதல்வா் மம்தா பானா்ஜி புதன்கிழமை தொலைபேசியில் தொடா்பு கொண்டு ஆதரவு தெரிவித்தாா். அப்போது, போராட்டத்துக்கு வலு சோ்க்கும் வகையில், போராட்டத்தில் நேரில் பங்கேற்குமாறு முதல்வருக்கு விவசாயிகள் சாா்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. கட்சியின் 5 போ் குழு, தில்லியில் விவசாயிகளை நேரில் சந்தித்தும் கட்சியின் ஆதரவைத் தெரிவித்துள்ளனா்’ என்று தெரிவித்துள்ளாா்.

மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்த 3 புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி பஞ்சாப், ஹரியாணா மாநிலங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தில்லியை முற்றுகையிட்டு நான்காவது வாரமாக இந்த தொடா் போராட்டத்தை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com