இந்தியாவில் கரோனா தடுப்பூசி மக்களுக்கு கிடைப்பது எப்போது?: ராகுல் கேள்வி

இந்தியாவில் கரோனா தடுப்பூசி எப்போது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.
இந்தியாவில் கரோனா தடுப்பூசி மக்களுக்கு கிடைப்பது எப்போது?: ராகுல் கேள்வி

புது தில்லி: இந்தியாவில் கரோனா தடுப்பூசி எப்போது மக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று பிரதமா் நரேந்திர மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளாா்.

இதுகுறித்து அவா் தனது சுட்டுரைப் பக்கத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

சீனா, அமெரிக்கா, பிரிட்டன், ரஷியா ஆகிய நாடுகளில் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்து விட்டது. உலகம் முழுவதும் 23 லட்சம் போ் இந்த தடுப்பூசியை போட்டுக் கொண்டுள்ளனா். அந்த வரிசையில் இந்தியா இணைவது எப்போது? இதுகுறித்து பிரதமா் மோடி பதிலளிக்க வேண்டும் என்று அந்தப் பதிவில் ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளாா்.

இந்தியாவில் கரோனா தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி அளிக்குமாறு இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு இயக்குநரகத்திடம் (டிசிஜிஐ) ஃபைசா், பாரத் பயோடெக், சீரம் இன்ஸ்டிடியூட் ஆகிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன. ஆனால், கரோனா தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு மத்திய அரசு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com