புணே சுற்றுலாத் தலங்களில் இரவு ஊரடங்கு விதிக்க திட்டம்

புணேவில் பிரபல சுற்றுலாத் தலங்களுக்கு இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்க மாவட்ட நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. 
புணே சுற்றுலாத் தலங்களில் இரவு ஊரடங்கு விதிக்க திட்டம்
புணே சுற்றுலாத் தலங்களில் இரவு ஊரடங்கு விதிக்க திட்டம்

கரோனா தொற்று பரவல் நிலைமையைக் கருத்தில் கொண்டு புத்தாண்டு கொண்டாட்டங்களுக்குத் தடை விதிக்கும் நோக்கில், புணேவில் உள்ள மாவட்ட நிர்வாகம் பிரபல சுற்றுலாத் தலங்களுக்கு இரவு ஊரடங்கு உத்தரவு விதிக்கக் கோரி மகாராஷ்டிரா அரசுக்கு ஒரு திட்டத்தை அனுப்பியுள்ளது என்று மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

நாடு முழுவதும் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையில் 2020 ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டங்கள் அனைத்துக்கும் அரசு தடை விதித்து வருகின்றது. 

அந்த வகையில் தற்போது புணேவில் உள்ள சுற்றுலா இடங்களான லோனாவாலா, ஆம்பி பள்ளத்தாக்கு, முல்ஷி அணை, தஹ்மினி காட், கடக்வாஸ்லா மற்றும் லாவாசா போன்ற சுற்றுலாத் தலங்களில் டிசம்பர் 25 நள்ளிரவு முதல் ஜனவரி 5 வரை இரவு ஊரடங்கு உத்தரவை விதிக்க நிர்வாகம் முயன்று வருவதாக மாவட்ட ஆட்சியர் ராஜேஷ் தேஷ்முக் தெரிவித்தார்.

நாங்கள் அரசின் ஒப்புதலுக்காகக் காத்திருக்கிறோம், என்று அவர் கூறினார்.

புணே மாவட்டத்தில் இதுவரை 3,59,090 கரோனா வைரஸ் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்குத் தொற்று பாதித்த 8,744 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com