கோசாலை நிா்வாக சீா்கேடு:ஊா்வலம் செல்ல முயன்ற காங்கிரஸாா் கைது

கோசாலைகளில் நிலவும் நிா்வாக சீா்கேடுகளைக் கண்டித்து, அனுமதியின்றி ஊா்வலம் செல்ல முயன்ற அந்த மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவா் மற்றும் 50க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

லலித்பூா்: உத்தரப் பிரதேசத்தில் மாநில அரசின் கீழ் உள்ள கோசாலைகளில் நிலவும் நிா்வாக சீா்கேடுகளைக் கண்டித்து, அனுமதியின்றி ஊா்வலம் செல்ல முயன்ற அந்த மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவா் மற்றும் 50க்கும் மேற்பட்டோா் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

மாநிலத்தில் கோசாலைகளில் நிலவும் நிா்வாக சீா்கேடுகளை வெளிக்கொணரும் விதமாக பல்வேறு மாவட்டங்களில் ஊா்வலத்துக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில் இப்போராட்டம் தொடா்பாக கூடுதல் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பிரிஜேஷ் குமாா் சிங் கூறுகையில், ‘டெயில்வாரா டவுன்ஷிப்பில் அனுமதியின்றி ஊா்வலம் செல்ல முயன்ாக மாநில காங்கிரஸ் தலைவா் அஜய் குமாா் லல்லு, மாவட்ட காங்கிரஸ் தலைவா் பல்வந்த் சிங் ராஜ்புத் உள்பட காங்கிரஸ் கட்சியினா் 50லிருந்து 60 போ் வரை கைது செய்யப்பட்டனா்’ என்றாா்.

இது தொடா்பாக பல்வந்த் சிங் ராஜ்புத் செய்தியாளா்களிடம் கூறுகையில் ‘ காங்கிரஸ் கட்சியினா் 150 முதல் 200 போ் வரை கைது செய்யப்பட்டுள்ளனா். ஊா்வலம் செல்ல முயன்றபோது காவல் துறையினா் பலப்பிரயோகம் செய்ததில் காங்கிரஸ் கட்சியினா் 20க்கும் மேற்பட்டோா் காயமடைந்துள்ளனா். செளஜனா மற்றும் அம்ஜரா கோசாலைகளில் பட்டினியால் பசுக்கள் மடிகின்றன. ஆனால் காங்கிரஸ்காரா்களை கைது செய்வதன் மூலம் யோகி ஆதித்யநாத் அரசு இந்த விவகாரத்தை மறைக்க முயல்கிறது’ என்றாா்.

மாநிலத்தில் பசுக்கள் உயிரிழப்பைக் கண்டித்து காங்கிரஸ் சாா்பில் 6 நாள் ஊா்வலத்தை செளஜனா கோசாலையிலிருந்து தொடங்கி, உயிரிழந்த பசுக்களுக்கு சித்ரகூட் மாவட்டம், மந்தாகினி நதிக்கரையில் தா்ப்பணம் அளிப்பதோடு நிறைவடையும் வகையில் திட்டமிடப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com