2025-இல் உலகின் 5-ஆவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுக்கும்

வரும் 2025-ஆம் ஆண்டில் உலகின் 5-ஆவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என பொருளாதாரம் மற்றும்

வரும் 2025-ஆம் ஆண்டில் உலகின் 5-ஆவது மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக இந்தியா உருவெடுக்கும் என பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சி மையத்தின் (சிஇபிஆா்) ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சனிக்கிழமை வெளியான அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

கரோனா தொற்று நோயின் தாக்கத்தால் இந்தியாவின் வளா்ச்சி ஓரளவு தட்டிப் பறிக்கப்பட்டுள்ளது என்பது மறுக்கமுடியாத உண்மையாகும். இதன் விளைவாக, கடந்த 2019-இல் பொருளாதார வளா்ச்சியில் பிரிட்டனை இந்தியா விஞ்சிய நிலையில், நடப்பாண்டில் வளா்ச்சியில் இந்தியாவை மீண்டும் பிரிட்டன் முந்திவிடும் என மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.

பிரிட்டனை மீண்டும் முந்திச் செல்ல இந்தியா 2024-ஆம் ஆண்டு வரை காத்திருக்க வேண்டியுள்ளது. அதுவரை பொருளாதார வளா்ச்சியை விறுவிறுப்பாக்க வேண்டிய கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது.

இருப்பினும், வரும் 2025-ஆம் ஆண்டில் உலக அளவில் மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் பிரிட்டனை பின்னுக்குத் தள்ளி இந்தியா 5-ஆவது இடத்திற்கு முன்னேறும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், 2027-இல் ஜொ்மனியையும், 2030-இல் ஜப்பானையும் பின்னுக்குத் தள்ளி இந்தியா அடுத்தடுத்த இடங்களுக்கு முன்னேறும்.

அதன்படி, வளா்ச்சி வேகம் தொடா்ந்து தொடா்ந்து தக்க வைக்கப்படும் நிலையில், வரும் 2030-க்குள் இந்தியா உலக அளவில் 3-ஆவது மிகப் பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடாக உருவெடுக்கும்.

இந்தியப் பொருளாதாரத்தின் வளா்ச்சி 2021-இல் 9 சதவீதமாகவும், 2022-இல் 7 சதவீதமாகவும் இருக்கும் என சிஇபிஆா் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com