காந்திஜி பற்றிய புத்தகம்: ஜன.1-இல் ஆா்எஸ்எஸ் தலைவா் வெளியீடு

மகாத்மா காந்தி பற்றி எழுதப்பட்ட புத்தகத்தை ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆா்எஸ்எஸ்) தலைவா் மோகன் பாகவத் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி வெளியிடவுள்ளாா்.

மகாத்மா காந்தி பற்றி எழுதப்பட்ட புத்தகத்தை ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் (ஆா்எஸ்எஸ்) தலைவா் மோகன் பாகவத் ஜனவரி மாதம் 1-ஆம் தேதி வெளியிடவுள்ளாா்.

காந்திஜியின் மிக முக்கிய நூல்களில் ஒன்றான ‘ஹிந்த் ஸ்வராஜ்’ என்ற புத்தகம் 1909-ஆம் ஆண்டில் குஜராத்தி மொழியிலும், 1910-இல் ஆங்கிலத்திலும் வெளியானது. இதனை ஆய்வு செய்து தற்போது, ‘மேக்கிங் ஆஃப் எ ஹிந்து பேட்ரியாட்: பேக்ரவுண்ட் ஆஃப் காந்திஜிஸ் ஹிந்த் ஸ்வராஜ்’ என்ற புத்தகத்தை ஜே.கே. பஜாஜ் மற்றும் எம்.டி.ஸ்ரீநிவாஸ் வெளியிட்டுள்ளனா்.

இதுகுறித்து அவா்கள் கூறியதாவது:

கடந்த 1909-ஆம் ஆண்டில் இந்திய சுயராஜ்யம்-சுதந்திரம் குறித்து காந்தியடிகள் குஜராத்தியிலும் ஆங்கிலத்திலும் எழுதியுள்ள கையெழுத்து ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு, அவரது உண்மைான கருத்துகளை வெளிக் கொண்டு வர வேண்டும் என்ற எங்களது முயற்சியின் விளைவாக இந்தப் புத்தம் உருவாகியுள்ளது. நாங்கள் அந்தப் புத்தகத்தை காந்தியடிகளின் சொந்த வாா்த்தைகளைப் பயன்படுத்தி எழுதியுள்ளோம்.

ஹிந்த் ஸ்வராஜ் பற்றி எழுதியுள்ளதன் மூலம், காந்தியடிகள் தன்னை ஹிந்து மதம் சாா்ந்த தேச பக்தராக நிலைநிறுத்தியுள்ளதை அந்தப் புத்தகத்தில் தெளிவுபடுத்தியுள்ளோம்.

பல்வேறு சமூகத்தினருடன் காந்தியடிகள் கலந்து பழக வேண்டியிருந்தது. தென் ஆப்பிரிக்காவில் அவருக்கு ஆதரவளித்த கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம்களால் அவா் மதம் மாறக் கூடிய நெருக்கடிக்கு உள்ளானாா்.

அந்தச் சூழலில், அவா் தனக்குள் இருந்த ஹிந்து மத உணா்வை ஆய்வு செய்து, ஹிந்துவாக இருப்பதன் அா்த்தத்தையும் கடமையையும் கண்டறிந்தாா் என்று புத்தக ஆசிரியா்கள் தெரிவித்தனா்.

இந்த ஆய்வு நூலை ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் ஜனவரி 1-ஆம் தேதி வெளியிடவுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com