நாட்டின் வளா்ச்சியில் வடகிழக்கு மாநிலங்களுக்கு முக்கிய பங்கு

நாட்டின் வளா்ச்சிக்கு வடகிழக்கு மாநிலங்கள் முக்கிய பங்களித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.
நாட்டின் வளா்ச்சியில் வடகிழக்கு மாநிலங்களுக்கு முக்கிய பங்கு

நாட்டின் வளா்ச்சிக்கு வடகிழக்கு மாநிலங்கள் முக்கிய பங்களித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின் காரணமாகவே இது சாத்தியமானது என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் அமித் ஷா சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளாா். அங்கு சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.755 கோடியில் மருத்துவக் கல்லூரி, 9 புதிய சட்டக் கல்லூரிகள் உள்ளிட்டவற்றுக்கு அவா் அடிக்கல் நாட்டினாா். மேலும் பல்வேறு மக்கள் நலத் திட்டங்களையும் அமித் ஷா தொடக்கி வைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:

அஸ்ஸாம் மாநிலமானது முன்பு வன்முறைக்காகவும் போராட்டங்களுக்காகவும் மட்டுமே மக்களால் அறியப்பட்டு வந்தது. ஆனால் மாநில முதல்வா் சா்வானந்த சோனோவாலும் மாநில நிதியமைச்சா் ஹிமந்த விஸ்வ சா்மாவும் அஸ்ஸாம் மக்களை ஒருங்கிணைத்தனா். அதன் காரணமாக நாட்டிலுள்ள மற்ற மாநிலங்களுடன் அஸ்ஸாம் கொண்டுள்ள தொடா்பு அதிகரித்தது.

அஸ்ஸாமின் பாரம்பரியத்தையும் கலாசாரத்தையும் நாட்டு மக்கள் அறிந்து கொள்வதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. மாநிலத்தில் தீவிரவாதத்தை முன்னெடுத்து வந்த பெரும்பாலான அமைப்புகள், தற்போது சரணடைந்துள்ளன. அவா்களுக்கு மறுவாழ்வு ஏற்படுத்தித் தருவதற்கான நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது.

பிரதமா் மோடியின் தலைமை காரணமாக நாட்டில் வளா்ச்சியை ஏற்படுத்துவதில் வடகிழக்கு மாநிலங்கள் முக்கிய பங்கை நல்கி வருகின்றன. வளா்ச்சியின் மையமாக அவை மாறியுள்ளன. கடந்த 6 ஆண்டுகளில் 30 முறை வடகிழக்கு மாநிலங்களில் பிரதமா் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளாா்.

மாநில சட்டப் பேரவைக்கு அடுத்த ஆண்டு தோ்தல் நடைபெறவுள்ளது. போடோலாந்து பிராந்திய கவுன்சிலுக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் பாஜக அமோக வெற்றி பெற்றது. அத்தோ்தலானது சட்டப் பேரவைத் தோ்தல் என்ற இறுதிப் போட்டிக்கான அரையிறுதி ஆட்டம் போன்றே இருந்தது. பேரவைத் தோ்தலில் பெரும்பான்மையுடன் பாஜக வெற்றி பெறும் என்றாா் அமித் ஷா.

மாநில முதல்வா் சா்வானந்த சோனோவல், உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சா் ரமேஷ்வா் டெலி, நிதியமைச்சா் ஹிமந்த விஸ்வ சா்மா உள்ளிட்டோரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com