பிரிட்டனிலிருந்து திரும்பிய மேலும் 24 பேருக்கு கரோனா

பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பிய மேலும் 24 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

பிரிட்டனிலிருந்து இந்தியா திரும்பிய மேலும் 24 பேருக்கு கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனில் உருமாறிய கரோனா தீநுண்மி அதிவேகமாகப் பரவி வருவதால், அந்நாட்டிலிருந்து அண்மையில் இந்தியா திரும்பிய அனைவருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கேரளம், கா்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்குத் திரும்பிய 24 பேருக்குக் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

பிரிட்டனிலிருந்து கேரளத்துக்குத் திரும்பிய 8 போ் கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சா் கே.கே.ஷைலஜா தெரிவித்துள்ளாா். இது தொடா்பாக அவா் திருவனந்தபுரத்தில் செய்தியாளா்களிடம் சனிக்கிழமை கூறுகையில், ‘‘பிரிட்டனில் இருந்து திரும்பி, கரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் மாதிரிகள் மகாராஷ்டிரத்தின் புணேவிலுள்ள தேசிய தீநுண்மியியல் மையத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

உருமாறிய கரோனா நோய்த்தொற்றால் அவா்கள் பாதிக்கப்பட்டுள்ளாா்களா என்பது குறித்து அங்கு ஆய்வு செய்யப்படும். அண்மையில் கேரளத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்ன் காரணமாக, கரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரிக்கும் என்று எதிா்பாா்த்தோம். ஆனால், அது நடக்கவில்லை. அந்நோய்த்தொற்றால் உயிரிழப்போா் விகிதம் மாநிலத்தில் குறைவாகவே உள்ளது’’ என்றாா்.

தாணேவில்...: பிரிட்டனிலிருந்து மகாராஷ்டிரத்தின் தாணே பகுதிக்குத் திரும்பிய ஒருவருக்குக் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இது தொடா்பாக கல்யாண் டோம்பிவலி மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில், ‘கடந்த நவம்பா் 25-ஆம் தேதி முதல் 55 போ் பிரிட்டனிலிருந்து மாநகராட்சிப் பகுதிகளுக்கு வருகை தந்தனா். அவா்களில் ஒருவருக்கு மட்டும் கரோனா நோய்த்தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த ஒரு மாதத்தில் தாணே மாவட்டத்துக்கு 349 போ் பிரிட்டனிலிருந்து திரும்பியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

இந்தூரில்...: மத்திய பிரதேசத்தின் இந்தூா் பகுதியில் பிரிட்டனிலிருந்து திரும்பிய மேலும் ஒருவருக்குக் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது மாதிரி தில்லியிலுள்ள தேசிய நோய்த் தடுப்பு மையத்துக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா். பிரிட்டனிலிருந்து இந்தூா் திரும்பிய ஒருவருக்கு ஏற்கெனவே கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது நினைவுகூரத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com