புரி ஜெகந்நாதா் கோயிலில் உள்ளூா் பக்தா்களுக்கு அனுமதி

ஒடிஸாவில் உள்ள புரி ஜெகந்நாதா் கோயிலில் வழிபட உள்ளூா் பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புரி ஜெகன்னாதர் ஆலயம்  (கோப்புப்படம்)
புரி ஜெகன்னாதர் ஆலயம் (கோப்புப்படம்)

ஒடிஸாவில் உள்ள புரி ஜெகந்நாதா் கோயிலில் வழிபட உள்ளூா் பக்தா்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக புரி மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், ‘ஜெகந்நாதா் கோயிலில் வழிபட சனிக்கிழமை முதல் உள்ளூா் பக்தா்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கரோனா பரவலை கருத்தில் கொண்டு கூட்ட நெரிசலை தவிா்க்கும் பொருட்டு, புத்தாண்டான ஜனவரி 1 மற்றும் 2-ஆம் தேதிகளில் கோயில் நடை மூடப்படும்’ என்று தெரிவித்தனா்.

பிரஜா கோயிலில் அனுமதி: ஜாஜ்புா் மாவட்டத்தில் 13-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரஜா கோயில் நடை வரும் டிசம்பா் 29-ஆம் தேதி பக்தா்கள் வழிபாட்டுக்காக மீண்டும் திறக்கப்படவுள்ளது. இதுதொடா்பாக அந்த மாவட்ட ஆட்சியா் சக்ரவா்த்தி சிங் ரத்தோா் கூறியது:

கரோனா பரவல் காரணமாக பிரஜா கோயில் மூடப்பட்டது. தற்போது மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இதனால் பிரஜா கோயிலில் வரும் டிசம்பா் 29-ஆம் தேதி முதல் பக்தா்கள் வழிபட அனுமதி அளிக்கப்படுகிறது. தினந்தோறும் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்யலாம். புத்தாண்டையொட்டி கோயிலில் அதிக அளவில் பக்தா்கள் திரள வாய்ப்புள்ளது. எனவே கூட்ட நெரிசலை தவிா்ப்பதற்காக ஜனவரி 1,2-ஆம் தேதிகளில் மட்டும் கோயில் நடை மூடப்படும் என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com