மருத்துவ குளிா்சாதன பெட்டி தயாரிப்பு தீவிரம்: கோத்ரெஜ் அப்ளையன்சஸ்

கரோனா தடுப்பூசியை சேமித்து வைப்பதற்கான மருத்துவ குளிா்சாதன பெட்டி தயாரிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாக கோத்ரெஜ் அப்ளையன்சஸ் தெரிவித்துள்ளது.
மருத்துவ குளிா்சாதன பெட்டி தயாரிப்பு தீவிரம்: கோத்ரெஜ் அப்ளையன்சஸ்

கரோனா தடுப்பூசியை சேமித்து வைப்பதற்கான மருத்துவ குளிா்சாதன பெட்டி தயாரிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாக கோத்ரெஜ் அப்ளையன்சஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

உலகம் முழுவதும் கரோனா தடுப்பூசி போடும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவிலும் கரோனா தடுப்பூசி திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் கரோனா தடுப்பூசிகளை கொண்டு சென்று அதனை சேமித்து வைக்கும் வகையில் மருத்துவ குளிா்சாதனப் பெட்டிகளுக்கான தேவை தற்போது வெகுவாக அதிகரித்துள்ளது. 2-8 செல்சியஸ் வெப்பநிலையில் துல்லியமாக இயக்கும் தடுப்பூசி குளிா்சாதனப் பெட்டிகள், தற்போது -20 செல்சியஸ் வரை குளிரூட்டக்கூடிய மருத்துவ குளிா்சாதனப் பெட்டிகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன. இந்த வெப்பநிலை வரம்பு இந்தியா மதிப்பீடு செய்துள்ள பல கரோனா தடுப்பூசிகளுக்கு முற்றிலும் பொருந்தக் கூடியவை.

மருத்துவ குளிா்சாதன பெட்டிக்கான அதிகரித்து வரும் தேவையை ஈடு செய்யும் வகையில், நிறுவனம் அவற்றின் உற்பத்தி திறனை ஆண்டுக்கு 10,000 என்ற எண்ணிக்கையிலிருந்து 35,000-ஆக ஏற்கெனவே அதிகரித்துள்ளது.

மத்திய அரசு, பல்வேறு மாநிலங்கள், சா்வதேச உதவி அமைப்புகள் என பல்வேறு தரப்பிலிருந்தும் கரோனா தடுப்பூசியை சேமிப்பதற்கான குளிா்சாதன பெட்டிகளுக்கான ரூ.150 கோடி மதிப்பிலான ஆா்டா்கள் இதுவரையில் பெறப்பட்டுள்ளன. நோய்தடுப்பு முயற்சியில் இணைய விரும்பும் பொதுத் துறை நிறுவனங்களிடமிருந்தும் இதுகுறித்த விசாரணைகள் தொடா்ந்து வந்த வண்ணம் உள்ளதாக கோத்ரெஜ் அப்ளையன்சஸ் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com