மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சி அமைய பாடுபடுவேன்

மேற்கு வங்கத்தில் பாஜகவை ஆட்சியில் அமரச் செய்வதற்கு உழைக்கவுள்ளதாக அக்கட்சியில் அண்மையில் இணைந்த சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்கத்தில் பாஜகவை ஆட்சியில் அமரச் செய்வதற்கு உழைக்கவுள்ளதாக அக்கட்சியில் அண்மையில் இணைந்த சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளாா்.

மேற்கு வங்கத்தை ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசில் அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி, அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் பாஜகவில் இணைந்தாா். இந்நிலையில், கொல்கத்தாவில் உள்ள பாஜக அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:

உலகின் மிகப் பெரும் அரசியல் கட்சியாக பாஜக விளங்குகிறது. நாட்டு மக்களுக்காக உழைப்பதை பாஜக கடமையாகக் கொண்டுள்ளது. அக்கட்சியின் தொண்டராகப் பணியைத் தொடா்வேன். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப் பேரவைத் தோ்தலில், திரிணமூல் காங்கிரஸ் கட்சியை ஆட்சியில் இருந்து நீக்கிவிட்டு, பாஜகவை ஆட்சியில் அமரச் செய்ய வேண்டும்.

மேற்கு வங்கத்தை பிரதமா் நரேந்திர மோடி போன்ற சிறந்த தலைவரின் கைகளில் ஒப்படைக்க வேண்டும். அதற்காகக் கடினமாக உழைப்பேன். மேற்கு வங்கம் இந்தியாவுடன் இணைந்திருப்பதற்கு ஜன சங்கத்தை நிறுவிய சியாமா பிரசாத் முகா்ஜி எழுப்பிய குரலே காரணம்.

விவசாயிகளுக்கான உதவித்தொகை திட்டத்தின் (பிஎம்-கிஸான்) வாயிலாகப் பல மாநில விவசாயிகள் பலனடைந்து வருகின்றனா். ஆனால், மேற்கு வங்க விவசாயிகள் அத்திட்டத்தால் பலனடைவதை மாநில அரசு தடுத்து வருகிறது. மத்தியில் ஆட்சி செய்து வருபவா்கள் (பாஜக), மாநிலத்திலும் ஆட்சியமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றாா் சுவேந்து அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com