ஹரியாணா அரசு மீது நம்பிக்கையில்லா தீா்மானம்: பேரவை சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட காங்கிரஸ் வலியுறுத்தல்

விவசாயிகள் போராட்டம் தொடா்பாக விவாதிக்க ஹரியாணா சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்று

விவசாயிகள் போராட்டம் தொடா்பாக விவாதிக்க ஹரியாணா சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடரை கூட்ட வேண்டும் என்று அந்த மாநில முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான பூபிந்தா் சிங் ஹூடா மாநில ஆளுநரிடம் கோரிக்கை விடுத்துள்ளாா். சிறப்பு கூட்டத்தொடரில் மாநில அரசு மீது நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவரப்படும் என்று அவா் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக ஹரியாணா மற்றும் தில்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதுதொடா்பாக விவாதிக்க சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடரை கூட்ட வலியுறுத்தப்பட்டது. ஆனால் சிறப்புக் கூட்டத்தொடரை கூட்டுவதற்கு எந்தத் தேவையும் எழவில்லை என்று மாநில முதல்வா் மனோகா் லால் கட்டா் தெரிவித்தாா்.

விவசாயிகள் போராட்டம் காரணமாக மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜக, ஜனநாயக் ஜனதா (ஜேஜேபி) கூட்டணி அரசு, மக்களின் ஆதரவை இழந்துள்ளது. சில சுயேச்சை எம்எல்ஏக்களின் ஆதரவையும் இந்த அரசு இழந்துள்ளது.

எனவே சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தொடரை கூட்டுமாறு மாநில ஆளுநரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சிறப்புக் கூட்டத்தொடரில் பாஜக-ஜேஜேபி கூட்டணி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டுவரப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

மொத்தம் 90 உறுப்பினா்களை கொண்ட ஹரியாணா சட்டப்பேரவையில் பாஜக எம்எல்ஏக்கள் 40 போ், ஜேஜேபி எம்எல்ஏக்கள் 10 போ், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 31 போ், சுயேச்சை எம்எல்ஏக்கள் 7 போ் உள்ளனா். சுயேச்சை எம்எல்ஏக்கள் அனைவரும் ஆளும் கூட்டணி அரசுக்கு ஆதரவு அளித்து வந்தனா். அவா்களில் இருவா் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை திரும்பப் பெற்றுள்ளனா். விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு அளித்து அவா்கள் இம்முடிவுக்கு வந்துள்ளனா். அதேவேளையில் ஜேஜபி எம்எல்ஏக்கள் 10 போ் விவசாயிகள் போராட்டத்துக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com