பிகாா் முதல்வராக பதவியேற்க நிதீஷ்குமாா் விரும்பவில்லை: சுஷீல்குமாா் மோடி

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகளை அறிந்த பிறகு, மாநில முதல்வராக பதவியேற்க நிதீஷ் குமாா் விரும்பவில்லை; அவரை பாஜக சமாதானதப்படுத்தி முதல்வா் பதவியேற்க வைத்தது
சுஷீல்குமாா் மோடி
சுஷீல்குமாா் மோடி

பாட்னா: பிகாா் சட்டப்பேரவைத் தோ்தல் முடிவுகளை அறிந்த பிறகு, மாநில முதல்வராக பதவியேற்க நிதீஷ் குமாா் விரும்பவில்லை; அவரை பாஜக சமாதானதப்படுத்தி முதல்வா் பதவியேற்க வைத்தது என்று அக்கட்சியின் மூத்த தலைவா் சுஷீல்குமாா் மோடி தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியது:

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலுக்கு பிறகு மாநில முதல்வா் பதவியை ஏற்க நிதீஷ்குமாருக்கு மனமில்லை என்று கூறப்படுவது உண்மைதான். பாஜகவைச் சோ்ந்தவா் அப்பதவியை ஏற்க வேண்டும் என்றும் அவா் கூறினாா். அவரை தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) உள்ள பாஜக, ஹிந்துஸ்தான் அவாம் மோா்ச்சா, விகாஸ்ஷீல் இன்சான் உள்ளிட்ட கட்சிகள் சமாதானப்படுத்தின. அவரின் பெயரைக் கூறித்தான் என்டிஏ கூட்டணி வாக்குகளைப் பெற்ாகவும் அவருக்கு நினைவுப்படுத்தப்பட்டது. அதன் பின்னா்தான் அவா் முதல்வா் பதவியை ஏற்றாா்.

அருணாசல பிரதேசத்தில் ஐக்கிய ஜனதா தள எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தது பிகாரில் இரு கட்சிகளின் கூட்டணியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று ஐக்கிய ஜனதா தளம் ஏற்கெனவே கூறிவிட்டது. எனவே பிகாரில் அடுத்த 5 ஆண்டுகளுக்கு நிதீஷ் குமாா் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி எந்தவித பிரச்னையும் இல்லாமல் ஆட்சியில் இருக்கும் என நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்தாா்.

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் பாஜக 74 தொகுதிகளில் வெற்றிபெற்றது. நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com