புதிய வகை கரோனாவுக்கு தடுப்பூசி பயனளிக்காது என்பதற்கு ஆதாரம் இல்லை: மத்திய அரசு

​கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி, புதிய வகை கரோனா வைரஸிலிருந்து பாதுகாக்காது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசி, புதிய வகை கரோனா வைரஸிலிருந்து பாதுகாக்காது என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை என மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

முதன்மை விஞ்ஞான ஆலோசகர் கே. விஜய் ராகவன் செய்தியாளர்கள் சந்திப்பில் இதுபற்றி தெரிவித்தது:

"பிரிட்டன் மற்றும் தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்டுள்ள புதிய வகை கரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள தடுப்பூசிகள் பயனளிக்காது என்பது எவ்வித ஆதாரமும் இல்லை. இது நோயின் தீவிரத் தன்மையை அதிகரிக்கும் என்பதற்கான ஆதாரமும் இல்லை."

தொடர்ந்து, நீதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே. பால் பேசியது:

"புதிய கரோனா பாதிப்பு, பலி மற்றும் சிகிச்சை பெற்று வருவோர் எண்ணிக்கைகள் தொடர்ச்சியாக குறைந்து வருகின்றன. பல்வேறு நாடுகளில் கடுமையான சூழல் நிலவும் நிலையில், இந்தியாவில் பாதிப்பு குறைந்து வருவது குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. பிரிட்டன் புதிய வகை கரோனா பல்வேறு நாடுகளுக்கு பரவியுள்ளது. இந்தியாவிலும் பரவியுள்ளது. நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்."
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com