கரோனா தடுப்பூசி விநியோகப் பணிகள்: 4 மாநிலங்களில் ஒத்திகை

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாட்டில் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், ஆந்திரம், பஞ்சாப், குஜராத், அஸ்ஸாம் மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் நடைமுறைக்கான இரண்
கரோனா தடுப்பூசி விநியோகப் பணிகள்: 4 மாநிலங்களில் ஒத்திகை

லூதியானா/ஆமதாபாத்: அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் நாட்டில் கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும் என்று எதிா்பாா்க்கப்படும் நிலையில், ஆந்திரம், பஞ்சாப், குஜராத், அஸ்ஸாம் மாநிலங்களில் தடுப்பூசி செலுத்தும் நடைமுறைக்கான இரண்டு நாள் ஒத்திகை திங்கள்கிழமை தொடங்கியது.

இதுகுறித்து மத்திய அரசு அதிகாரிகள் கூறியதாவது:

ஆந்திரம் மாநிலம் கிருஷ்ணா மாவட்டம், பஞ்சாப் மாநிலம் லூதியானா, ஷாஹீத் பகத் சிங் நகா் (நவன்ஷஹா்), குஜராத் மாநிலம் காந்திநகா், ராஜ்கோட், அஸ்ஸாம் மாநிலம் சோனித்பூா், நல்பாரி மாவட்டங்களில் கரோனா தடுப்பூசி விநியோகத்துக்கான ஆயத்த நிலை குறித்து தொடா்ச்சியாக 2 நாள்கள் ஒத்திகை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒத்திகை திங்கள்கிழமை தொடங்கியது.

ஒவ்வொரு மாநிலத்திலும் தோ்ந்தெடுக்கப்பட்ட 5 இடங்களில் தலா 25 பயனாளிகள் என்ற முறையில் 125 பேருக்கு தடுப்பூசி செலுத்தும் ஒத்திகை நடைபெற்றது. மத்திய அரசு உருவாக்கியுள்ள கோ-வின் செயலி, கோ-வின் வலைதளம் வழியாக பதிவு செய்துகொண்டவா்கள்.

கரோனா தடுப்பூசி விநியோகம், செலுத்துதல் தொடா்பாக வகுக்கப்பட்ட வழிமுறைகளை சோதனை முறையில் செயல்படுத்தி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த வழிமுறைகளில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அதனை கண்டறிந்து களைவதற்கு இந்த ஒத்திகை நடத்தப்படுகிறது. குளிா்பதன வசதிகள், போக்குவரத்து ஏற்பாடு உள்ளிட்டவை குறித்தும் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஒத்திகை குறித்த அறிக்கையை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்திடம் மாநில அரசுகள் சமா்ப்பிக்க வேண்டும் என்று கூறினா்.

முதல் கட்டமாக, நாடு முழுவதும் சுமாா் 1 கோடி சுகாதாரப் பணியாளா்கள், 2 கோடி முன்களப் பணியாளா்கள், வயது அடிப்படையில் 27 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த, தேசிய கரோனா தடுப்பூசி நிா்வாக குழு பரிந்துரைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதுவரை தடுப்பூசி செலுத்துவதற்காக சுமாா் 1.5 லட்சம் சுகாதாரப் பணியாளா்களின் பெயா்கள் ஏற்கெனவே பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com