குஜராத்: ராஜ்கோட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை: காணொலியில் பிரதமர் மோடி 31-இல் அடிக்கல்

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்திற்கு  டிச. 31-ஆம் தேதி,  காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுவார் என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். 
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி


ஆமதாபாத்: குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்திற்கு  டிச. 31-ஆம் தேதி,  காணொலி மூலம் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டுவார் என்று அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். 

ரூ. 1,195 கோடி  செலவில் ராஜ்கோட் நகரின் புறநகர் பகுதியான காந்தேரி கிராமம் அருகே 201 ஏக்கர் பரப்பளவில் இந்த வளாகம் அமைக்கப்பட உள்ளது.

இதுகுறித்து ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனையின் துணை இயக்குநர் சிரம்தீப் சின்ஹா கூறியதாவது: 

"டிசம்பர் 31 ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமானப் பணிகளுக்கு காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டுவார். ராஜ்கோட்டில் நடைபெறும் நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி, துணை முதல்வர் நிதின் படேல் உள்ளிட்டோர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மத்திய பிஎஸ்யூ எச்எஸ்சிசி நிறுவன வளாகத்தில் இதற்கான நிகழ்ச்சி நடைபெறும். தற்போது எய்ம்ஸ் மருத்துவமனையின் 9 கட்டடங்களின் வரைபடங்களுக்கு தற்காலிக ஒப்புதல் கிடைத்துள்ளது. 

50 எம்பிபிஎஸ் மாணவர்களைக் கொண்ட ராஜ்கோட் எய்ம்ஸ் மருத்துவமனையின், முதல் தொகுப்பின் கல்வி அமர்வு டிசம்பர் 21-ஆம் தேதி அன்று பண்டிட் தீனதயாள் உபாத்யாய மருத்துவக் கல்லூரியில் உள்ள தற்காலிக வளாகத்தில் குஜராத் முதல்வர் முதல்வர் ரூபானி, மத்திய சுகாதாரத் துறை  அமைச்சர் ஹர்ஷ் வர்தன், மத்திய இணை சுகாதாரத் துறை அமைச்சர் அஸ்வின் செüபே ஆகியோர் காணொலி மூலம் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com