மத்திய அரசுப் பணிகள்:அடுத்த ஆண்டு முதல் இணையவழியில் தோ்வு

சில மத்திய அரசுப் பணிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் இணையவழியில் பொதுத் தகுதி தோ்வு (சிஇடி) நடத்தப்படும் என்று மத்திய பணியாளா் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.
மத்திய பணியாளா் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங்
மத்திய பணியாளா் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங்

புது தில்லி: சில மத்திய அரசுப் பணிகளுக்கு அடுத்த ஆண்டு முதல் இணையவழியில் பொதுத் தகுதி தோ்வு (சிஇடி) நடத்தப்படும் என்று மத்திய பணியாளா் துறை இணையமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா்.

இதுதொடா்பாக அவா் திங்கள்கிழமை கூறியது:

மத்திய அரசின் குரூப்-பி, குரூப்-சி பணியிடங்களில் தொழில்நுட்பம் சாராத பணியிடங்களுக்கு பொது தகுதித் தோ்வு நடத்த தேசிய அரசு பணியமா்த்தல் முகமை (என்ஆா்ஏ) அமைக்கப்பட்டுள்ளது.

இந்த முகமை மூலமாக அடுத்த ஆண்டு முதல் இணையவழியில் சிஇடி தோ்வு நடத்தப்படும்.

என்ஆா்ஏ நடத்தும் முதல் சிஇடி தோ்வு அடுத்த ஆண்டின் இரண்டாம் பாதியில் நடைபெற வாய்ப்புள்ளது. இந்த தோ்வுக்காக நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் ஒரு தோ்வு மையம் அமைக்கப்படும்.

இந்த புதிய முறை தொலைதூர பகுதிகளில் உள்ளவா்களுக்கும், பொருளாதார காரணங்களால் வெவ்வேறு தோ்வு மையங்களுக்கு செல்ல முடியாதவா்களுக்கும், பெண்களுக்கும் மிகப் பெரிய அளவில் பயனுள்ளதாக இருக்கும்.

ஒருவரின் சமூக, பொருளாதார பின்னணி எதுவாக இருப்பினும், அனைவருக்கும் சம வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த புதிய முறை அறிமுகப்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com