ஆரோக்கியமே முக்கியம் என்று 2020 கற்றுக் கொடுத்துள்ளது: மோடி

ஆரோக்கியமே முக்கியமானது என்பதை 2020 நமக்கு கற்றுக் கொடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

ஆரோக்கியமே முக்கியமானது என்பதை 2020 நமக்கு கற்றுக் கொடுத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் கட்டப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் பேசிய அவர், ''நாட்டில் கரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்துகொண்டே வருகிறது. அடுத்த ஆண்டில் மிகப்பெரிய அளவில் கரோனா தடுப்பு மருந்து வழங்கும் பணியை மேற்கொள்ளவுள்ளோம்.

உலக ஆரோக்கியத்தின் மையமாக இந்தியா உருவெடுத்துள்ளது. அடுத்த ஆண்டில் சுகாதாரத்துறையில் இந்தியாவின் பங்கை மேலும் பலப்படுத்த வேண்டும்.

தனிப்பட்ட ஆதாயத்திற்காக சிலர் வெளியிடும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம். நாட்டில் வதந்திகள் எளிதாக பரவுகின்றன. தனிப்பட்ட பலனுக்காகவும், பொறுப்பற்ற தன்மையாலும் சிலர் வந்தந்திகளை பரப்பி வருகின்றனர். 

கரோனா தடுப்பூசிக்கான மருந்துகள் பயன்பாட்டிற்கு வரும் வேளையில் வதந்திகள் பரப்பப்படுகின்றன. அதனை மக்கள் நம்பக்கூடாது'' என்று கேட்டுக்கொண்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com