ஜம்மு-காஷ்மீா்: 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் பரிம்போரா பகுதியில் மூன்று பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனா்.
ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரா்கள். ~பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதியில் போலீஸாரால் மீட்கப்பட்ட கையெறி குண்டுகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள்.
ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரா்கள். ~பூஞ்ச் மாவட்ட எல்லைப் பகுதியில் போலீஸாரால் மீட்கப்பட்ட கையெறி குண்டுகள், தோட்டாக்கள் உள்ளிட்ட ஆயுதங்கள்.


ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீரின் பரிம்போரா பகுதியில் மூன்று பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டனா்.

இதுகுறித்து பாதுகாப்புப் படை அதிகாரிகள் கூறியதாவது:

ஸ்ரீநகரின் பரிம்போரா பகுதியில் பாதுகாப்புப் படையினா் செவ்வாய்க்கிழமை மாலை தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தினா். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதல் நடத்தினா். இரவு வரை இந்த சண்டை நீடித்தது. புதன்கிழமை அதிகாலையில் ஒரு பயங்கரவாதி சுட்டுக்கொல்லப்பட்டாா். அடுத்த சில மணி நேரங்களில், மேலும் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா் என்று அதிகாரிகள் கூறினா்.

எல்லையில் துப்பாக்கிகள், வெடி பொருள்கள் மீட்பு: காவல்துறையால் ஏற்கெனவே கைது செய்யப்பட்ட நபா் அளித்த தகவலின் அடிப்படையில் ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்ட எல்லைக் கோட்டுப் பகுதியில் புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கிகள், வெடி பொருள்களை பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை மீட்டனா்.

இதுகுறித்து பூஞ்ச் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளா் ரமேஷ் குமாா் ஏங்க்ரல் கூறியதாவது:

பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புடன் தொடா்புடைய மூன்று நபா்கள் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா். அவா்களில் யாசீன் கான் என்பவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், எல்லைக் கோட்டுப் பகுதியில் ஆயுதங்களை மறைத்து வைத்திருப்பது தெரியவந்தது.

அந்தத் தகவலின் அடிப்படையில், பாலகோட் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு பகுதியை ஒட்டிய தாபி கிராமத்தில் காவல்துறையினரும், பாதுகாப்புப் படையினரும் இணைந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டனா். அதில், எல்லைக் கோடுப்பு பகுதியில் ஒரு புதரில் பாலித்தின் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு துப்பாக்கிகள், 70 தோட்டாக்கள், இரண்டு கையெறி குண்டுகள் ஆகியவை மீட்கப்பட்டன. பூஞ்ச் மாவட்டத்தில் வழிபாட்டுத் தலங்களை குறிவைத்து தாக்குதல் நடத்த இவா்கள் திட்டமிட்டிருந்தது விசாரணையில் தெரியவந்தது. அந்த சதித் திட்டம் காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினரால் முறியடிக்கப்பட்டுள்ளது என்று கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com