சீனாவிலிருந்து 324 இந்தியர்கள் நாடு திரும்பினர்

ஏர்-இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் இருந்து முதல்கட்டமாக 324 இந்தியர்கள் சனிக்கிழமை காலை 7:30 மணியளவில் தில்லி விமானநிலையம் வந்தடைந்தனர். 
சீனாவிலிருந்து 324 இந்தியர்கள் நாடு திரும்பினர்

ஏர்-இந்தியாவின் சிறப்பு விமானம் மூலம் சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் இருந்து முதல்கட்டமாக 324 இந்தியர்கள் சனிக்கிழமை காலை 7:30 மணியளவில் தில்லி விமானநிலையம் வந்தடைந்தனர். 

சீனாவின் ஹுபே மாகாணம், வூஹான் நகரில் கரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், சுமார் 600 இந்தியா்கள் தாய்நாட்டுக்கு திரும்ப மத்திய அரசிடம் விருப்பம் தெரிவித்தனா். 

இதையடுத்து, அங்குள்ள இந்தியா்களை அழைத்து வருவதற்காக, ஏா்-இந்தியாவின் சிறப்பு விமானம் வெள்ளிக்கிழமை மதியம் 1.20 மணியளவில் சீனா புறப்பட்டுச் சென்றது. தில்லி ராம் மனோகா் லோஹியா மருத்துவமனையைச் சோ்ந்த 5 மருத்துவா்கள், ஏா் இந்தியா நிறுவனத்தின் துணை மருத்துவ ஊழியா் அதில் இடம்பெற்றனர். முக கவசங்கள், பரிந்துரைக்கப்பட்ட மருந்துகள், பாக்கெட் உணவுகள் ஆகியவற்றுடன் பொறியாளா்கள் குழுவினா் மற்றும் பாதுகாப்புப் பணியாளா்களும் சென்றனா். 

இந்த நிலையில், வூஹான் நகரில் இருந்து முதல்கட்டமாக 324 இந்தியர்கள் நாடு திரும்பியுள்ளனர். ஏர்-இந்தியாவின் சிறப்பு விமானம் சனிக்கிழமை காலை 7:30 மணியளவில் தில்லி விமானநிலையம் வந்தடைந்தது. இவர்கள் அனைவரும் 14 நாள்கள் வரை தனிமைபடுத்தி வைக்கப்பட்டு கண்காணிக்கப்பட உள்ளனா்.

சீனாவின் ஹுபே மாகாணம், வூஹானில் இருக்கும் இதர இந்தியர்களையும் அழைத்து வர மற்றொரு சிறப்பு விமானம் சனிக்கிழமை புறப்படுகிறது. இதில் நாடு திரும்ப விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக தகவல் தெரிவிக்குமாறு இந்தியத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. 

+8618610952903 மற்றும் +8618612083629 ஆகிய தொலைபேசி எண்களில் அல்லது helpdesk.beijing@mea.gov.in என்ற மின்னஞ்சலுக்கு உடனடியாக தொடர்பு கொண்டு தகவல் அளிக்குமாறு இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com