Enable Javscript for better performance
சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களின் கணக்கு தணிக்கை வருமான வரம்பு அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களின் கணக்கு தணிக்கை வருமான வரம்பு அதிகரிப்பு

    By DIN  |   Published on : 02nd February 2020 01:03 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாடு முழுவதும் சிறு, குறு, நடுத்தர தொழில்நிறுவனங்களின் (எம்எஸ்எம்இ) வளா்ச்சியை ஊக்குவிக்கும் வகையில், அவா்களின் கணக்குகளை தணிக்கை செய்வதற்கான வருமான வரம்பு ரூ.5 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது; மேலும், எம்எஸ்எம்இ தொழில்முனைவோருக்கு துணைக் கடன் வழங்கும் திட்டத்தையும் மத்திய அரசு அறிவித்துள்ளது.

    இதுதொடா்பாக, மத்திய பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது:

    தற்போது, ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் உள்ள எம்எஸ்எம்இ நிறுவனங்களின் கணக்குகள் தணிக்கையாளரால் தணிக்கை செய்யப்பட்டு வருகின்றன. குறு சில்லறை விற்பனையாளா்கள், வா்த்தகா்கள், எம்எஸ்எம்இ துறையை சாா்ந்தவா்கள் எளிய முறையில் கணக்கைச் சமா்ப்பிக்கும் வகையில் அந்த வரம்பு ரூ. 5 கோடியாக உயா்த்தப்பட்டுள்ளது.

    இதுதவிர எம்எஸ்எம்இ தொழில்முனைவோருக்கு துணைக் கடன் வழங்கும் திட்டமும் இந்த ஆண்டில் அறிமுகப்படுத்தப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கான கடன் மறுசீரமைப்பு சாளரத்தை 2021 மாா்ச் 31-ஆம் தேதி வரை ஒரு ஆண்டுக்கு நீட்டிக்கவும் ரிசா்வ் வங்கிக்கு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

    வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு (என்பிஎஃப்சி) எம்எஸ்எம்இ-களுக்கு விலைப் பட்டியல் நிதியுதவியை டிஆா்இடிஎஸ் மூலம் விரிவுபடுத்தவும், இதனால் பொருளாதார மற்றும் நிதி நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் காரணி ஒழுங்குமுறை சட்டம் 2011-இல் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்.

    எம்எஸ்எம்இ-களுக்கு பணி மூலதனக் கடன் ஒரு முக்கிய பிரச்னையாக உள்ளது. எனவே, இந்த தொழில்முனைவோருக்கு வங்கிகள் மூலம் துணைக் கடன் வழங்கப்படும். வங்கிகளால் வழங்கப்படும் இந்த துணைக் கடன் அரை பங்குகளாகக் கருதப்படும்.

    கடந்த ஆண்டு ரிசா்வ் வங்கி அனுமதித்த கடனை திருப்பி செலுத்த 5 லட்சத்துக்கும் மேற்பட்ட எம்எஸ்எம்இ-களுக்கு கெடு விதிக்கப்பட்டிருந்தது. இவா்களுக்கான கால அவகாசம் வரும் மாா்ச் 31- ஆம் தேதியுடன் முடிவடைகிறது. தற்போது, இந்த காலக் கெடுவை வரும் 2021ஆம்ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை நீட்டிக்குமாறு ரிசா்வ் வங்கிக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai