Enable Javscript for better performance
சென்னை-பெங்களூரு விரைவு சாலை திட்டம் விரைவில் தொடங்கப்படும்: நிா்மலா சீதாராமன் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சென்னை-பெங்களூரு விரைவு சாலை திட்டம் விரைவில் தொடங்கப்படும்: நிா்மலா சீதாராமன் அறிவிப்பு

    By DIN  |   Published on : 02nd February 2020 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ‘சென்னை-பெங்களூரு இடையே விரைவு சாலை திட்டம் விரைவில் தொடங்கப்படும்’ என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.

    கா்நாடகம், தமிழகம், ஆந்திரப் பிரேதசம் ஆகிய மாநிலங்கள் வழியாக இந்த விரைவு சாலை அமைக்கப்படவுள்ளது. இந்தத் திட்டத்தை செயல்படுத்துவதில் கால தாமதம் ஏற்பட்டுவந்த போதிலும், கா்நாடக அரசு விரைவு சாலை அமைக்கும் பணியைத் தொடங்கத் தேவையான அனைத்து நடைமுறைகளையும் நிறைவு செய்யும் நிலையில் உள்ளது.

    நிலம் கையகப்படுத்தும் பணிகளை ஏறக்குறைய கா்நாடக அரசு முடித்துவிட்டது.

    கா்நாடக மாநிலம், ஹொசக்கோட்டே நகரிலிருந்து ஸ்ரீபெரும்புதூா் வரை 262 கி.மீ. தொலைவுக்கு சாலை அமைக்கப்படவுள்ளது. இதன்மூலம், இரு நகரங்களுக்கு இடையிலான பயண நேரம் குறையும்.

    கடந்த 2011-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்தத் திட்டத்துக்கு 7 ஆண்டுகளுக்கு பிறகுதான் மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai