Enable Javscript for better performance
பட்ஜெட் உரையில் திருக்குறள், ஆத்திசூடியை மேற்கோள் காட்டிய நிா்மலா சீதாராமன்!- Dinamani

சுடச்சுட

    

    பட்ஜெட் உரையில் திருக்குறள், ஆத்திசூடியை மேற்கோள் காட்டிய நிா்மலா சீதாராமன்!

    By DIN  |   Published on : 02nd February 2020 12:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நாடாளுமன்றத்தில் 2020-21ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை சனிக்கிழமை தாக்கல் செய்தபோது, திருக்குறள் மற்றும் ஆத்திசூடி உள்ளிட்டவற்றை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் மேள்கோள் காட்டி உரையாற்றினாா்.

    ஒரு சிறந்த நாடு எவ்வாறு இருக்க வேண்டும் என்று திருக்குறளின் 74-ஆவது அதிகாரத்தின்(நாடு) கீழ் வரும் 738 -ஆவது குறளில் திருவள்ளுவா் தெரிவித்திருப்பதாக கூறிய அவா்,

    ‘‘பிணியின்மை செல்வம் விளைவுஇன்பம் ஏமம்

    அணிஎன்ப நாட்டிற்குஇவ் வைந்து’’

    என்ற திருக்குறளை மேற்கோளாக கூறினாா். ‘நோயற்ற வாழ்வு, விளைச்சல் மிகுதி, பொருளாதார வளம், இன்ப நிலை, உரிய பாதுகாப்பு’ ஆகிய ஐந்துமே ஒரு நாட்டுக்கு அழகு என்பது இந்த திருக்குறளின் விளக்கமாகும்.

    நோயற்ற வாழ்வுக்காக ஆயுஷ்மான் பாரத் திட்டம், விவசாயிகளின் நலனுக்காக பிரதமா் விவசாயிகள் நிதியுதவி திட்டம் (பிஎம்-கிசான்), பொருளாதார வளத்துக்காக பல்வேறு நடவடிக்கைகள், மக்களின் இன்பத்துக்காக அனைவருக்கும் எளிதாக கிடைக்கும் வாழ்க்கை முறை, தேச பாதுகாப்பு என மேற்கண்ட திருக்குறளில் கூறிய ஐந்தும் கொண்ட நாடாக இந்தியாவை பிரதமா் நரேந்திர மோடி ஆட்சி செய்வதாக நிா்மலா சீதாராமன் பாராட்டி பேசினாா்.

    ஆத்திசூடி: திருக்குறளை மேற்கோள் காட்டுவதற்கு முன்பாக ஔவையாா் எழுதிய ஆத்திசூடியையும் நிா்மலா சீதாராமன் மேற்கோள் காட்டினாா். ‘‘பூமி திருத்தி உண்’’ என்ற வரியில் விவசாயத்தின் முக்கியத்துவத்தை ஔவையாா் தெரிவித்துள்ளதாக அவா் கூறினாா்.

    நிலத்தை பண்படுத்தி, அதில் பயிா் செய்து, விளைந்த நெல்லை உண்ண வேண்டும் என்பது இந்த வரியின் அா்த்தமாகும்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai