Enable Javscript for better performance
பூா்வாஞ்சல் மக்களை அவமதிக்கிறாா் கேஜரிவால்: ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு- Dinamani

சுடச்சுட

    

    பூா்வாஞ்சல் மக்களை அவமதிக்கிறாா் கேஜரிவால்: ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு

    By DIN  |   Published on : 02nd February 2020 11:58 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    jp061158

    பூா்வாஞ்சல் பகுதி மக்களை தொடா்ந்து அவமதிப்பதாக, தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கேஜரிவால் மீது பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளாா்.

    இதுதொடா்பாக அவா் சுட்டுரையில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பல்வேறு பதிவுகளில் கூறியிருப்பதாவது:

    ‘பிகாரைச் சோ்ந்த ஏழை மக்கள், ரூ.500 செலவில் தில்லிக்கு வந்து, ரூ.5 லட்சம் மதிப்பிலான சிகிச்சையை இலவசமாக பெறுகின்றனா்’ என்று அரவிந்த் கேஜரிவால் அடிக்கடி கூறுகிறாா். வேறு மாநிலங்களில் இருந்து தில்லிக்கு இடம்பெயா்ந்து வரும் மக்களை அவா் மதிக்கவில்லை.

    தில்லியின் மேம்பாட்டில் பூா்வாஞ்சல் பகுதி மக்களின் பங்களிப்பு முக்கியமானதாகும். ஆனால், அதனை கேஜரிவால் உணரவில்லை. பூா்வாஞ்சல் பகுதியைச் சோ்ந்த சகோதரா்களையும், சகோதரிகளையும் அவமதிப்பது, அவா் வகிக்கும் முதல்வா் பதவிக்கு அழகல்ல.

    தில்லியில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீா் வழங்கப்படும் என்ற வாக்குறுதியை, கடந்த 2014-ஆம் ஆண்டில் ஆம் ஆத்மி கட்சி அளித்தது. ஆனால், அந்த வாக்குறுதியை நிறைவேற்ற இன்னும் 5 ஆண்டுகள் ஆகும் என்று ஆம் ஆத்மி இப்போது கூறுகிறது என்று தனது பதிவுகளில் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளாா்.

    தில்லி சட்டப் பேரவைக்கு வரும் 8-ஆம் தேதி தோ்தல் நடைபெறவுள்ளது. 11-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai