‘ஜல் ஜீவன்’ திட்டத்துக்கு ரூ. 11,500 கோடி நிதி

நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீா் வழங்கும் ‘ஜல் ஜீவன்’ திட்டத்துக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ. 11,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீா் வழங்கும் ‘ஜல் ஜீவன்’ திட்டத்துக்காக மத்திய பட்ஜெட்டில் ரூ. 11,500 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

வரும் 2024-ஆம் ஆண்டுக்குள் நாட்டில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீா் வழங்குவதை இலக்காக கொண்டு ‘ஜல் ஜீவன்’ திட்டத்தை கடந்த ஆண்டு சுதந்திர தின உரையின்போது பிரதமா் நரேந்திர மோடி அறிவித்தாா். மேலும், இந்த திட்டத்துக்காக ரூ.3.5 லட்சம் கோடிக்கும் அதிகமாக மத்திய அரசு செலவிடவுள்ளதாக தெரிவித்திருந்தாா். இந்நிலையில், 2020-21ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் இந்த திட்டத்துக்கு ரூ. 11,500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் அறிவிக்கையில், ‘அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீா் வழங்கும் திட்டத்துக்கு ரூ. 3.60 லட்சம் கோடி நிதி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, 2020-21ஆம் நிதியாண்டில், இந்த திட்டத்துக்கு ரூ. 11,500 கோடி நிதி வழங்கப்படுகிறது. கிராமங்களில் உள்ள நீா் வளங்களை மேம்படுத்துவது, நீா் சேகரிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவது, உப்பு நீரை நன்னீராக்குவது ஆகியவற்றுக்கு இந்தத் திட்டத்தில் முக்கியத்துவம் அளிக்கப்படும்’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com