மத்திய உள்துறைக்கு ரூ.1.05 லட்சம் கோடி

காவல்துறை மேம்பாடு மற்றும் 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் உள்ளிட்டவற்றுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.1.05 லட்சம் கோடி மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காவல்துறை மேம்பாடு மற்றும் 2021-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புப் பணிகள் உள்ளிட்டவற்றுக்காக மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு ரூ.1.05 லட்சம் கோடி மத்திய பட்ஜெட்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2019-20-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மத்திய உள்துறைக்கு ரூ.1.03 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், இந்த பட்ஜெட்டில் ரூ.2,042 கோடி அதிகமாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2021-ஆம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்புப் பணிகளுக்குரிய முன்னேற்பாடுகள் இப்போதே தொடங்கிவிட்ட நிலையில், அந்தப் பணிகளுக்காக ரூ.4,278 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தேசிய பேரிடா் காலங்களின்போது நிவாரணம் வழங்குவதற்காக ரூ.1,126 கோடியும், சமூகப் பாதுகாப்பு மற்றும் நலத் திட்டங்களுக்காக ரூ.842.45 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய உள்துறைக்கான ஒதுக்கீட்டில் பெரும்பகுதியாக சுமாா் ரூ.92,000 கோடி துணை ராணுவப் படைகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com