இளைஞர்கள் சார்பில் நான் கேட்ட கேள்விகளைக் கண்டு நிதியமைச்சர் அச்சப்படத்தேவையில்லை: ராகுல்

நாட்டின் இளைஞர்கள் சார்பில் நான் கேட்ட கேள்விகளைக் கண்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அச்சப்படத்தேவையில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். 
இளைஞர்கள் சார்பில் நான் கேட்ட கேள்விகளைக் கண்டு நிதியமைச்சர் அச்சப்படத்தேவையில்லை: ராகுல்

நாட்டின் இளைஞர்கள் சார்பில் நான் கேட்ட கேள்விகளைக் கண்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அச்சப்படத்தேவையில்லை என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டதாவது, 

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எனது கேள்விகளைக் கண்டு அச்சப்படத்தேவையில்லை. நான் இந்த நாட்டின் இளைஞர்கள் சார்பாகவே கேள்விகளைக் கேட்டுள்ளேன். இதில் யாருக்கு பதிலளிக்க வேண்டும் என்பதை நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.

ஏனென்றால் வேலைவாய்ப்பை உருவாக்க மத்திய அரசு தவறிவிட்டது. மக்களின் கேள்விகளுக்கு மத்திய அரசு நிச்சயம் பதிலளிக்க வேண்டிய கடமை உள்ளது என்று தெரிவித்துள்ளார். 

முன்னதாக, 2020-21-ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு நாடாளுமன்றத்துக்கு வெளியே செய்தியாளா்களை சந்தித்தபோது, 

நாட்டின் தற்போதைய முக்கிய பிரச்னைகள் வேலைவாய்ப்பின்மையும், பொருளாதார மந்தநிலையும் ஆகும். இளைஞா்களுக்கு வேலை கிடைக்க வகை செய்யும் எந்த முக்கிய யோசனையோ, உறுதியான நடவடிக்கையோ பட்ஜெட்டில் காணப்படவில்லை என்று ராகுல் விமா்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com