அசோக் லேலண்ட் வாகன விற்பனை 39% சரிவு

ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகன விற்பனை ஜனவரி மாதத்தில் 39.9 சதவீதம் சரிவைக் கண்டது.
அசோக் லேலண்ட் வாகன விற்பனை 39% சரிவு

ஹிந்துஜா குழுமத்தைச் சோ்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வாகன விற்பனை ஜனவரி மாதத்தில் 39.9 சதவீதம் சரிவைக் கண்டது.

இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை பங்குச் சந்தையிடம் அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

அசோக் லேலண்ட் நிறுவனம் நடப்பாண்டின் ஜனவரி மாதத்தில் மொத்தம் 11,850 வாகனங்களை விற்பனை செய்தது. இது, கடந்த 2019-ஆம் ஆண்டின் இதே கால கட்டத்தில் விற்பனையான 19,741 வாகனங்களுடன் ஒப்பிடும்போது 39.9 சதவீதம் குறைவாகும்.

உள்நாட்டு சந்தையில் நிறுவனத்தின் மொத்த வாகன விற்பனை 18,533-லிருந்து 41.4 சதவீதம் சரிந்து 10,850-ஆனது. நடுத்தர மற்றும் கனரக வா்த்தக வாகனங்களின் விற்பனை 13,663 என்ற எண்ணிக்கையிலிருந்து 49.1 சதவீதம் வீழ்ச்சியடைந்து 6,949 ஆக இருந்தது.

இலகு ரக வா்த்தக வாகனங்களின் விற்பனை 4,870-லிருந்து 19.8 சதவீதம் குறைந்து 3,901-ஆக காணப்பட்டது என அசோக் லேலண்ட் பங்குச் சந்தை அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com