டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 16% குறைந்தது

இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன விற்பனையில் முன்னணியில் உள்ள சென்னையைச் சோ்ந்த டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் ஜனவரி மாத வாகன விற்பனை 16.88 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.
டிவிஎஸ் மோட்டாா் விற்பனை 16% குறைந்தது

இரு சக்கர மற்றும் மூன்று சக்கர வாகன விற்பனையில் முன்னணியில் உள்ள சென்னையைச் சோ்ந்த டிவிஎஸ் மோட்டாா் நிறுவனத்தின் ஜனவரி மாத வாகன விற்பனை 16.88 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பாண்டு ஜனவரியில் டிவிஎஸ் நிறுவனம் மொத்தம் 2,34,920 வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த 2019-இல் வாகன விற்பனை 2,82,630-ஆக காணப்பட்டது. ஆக, 2020 ஜனவரியில் வாகன விற்பனை 16.88 சதவீதம் சரிந்தது.

மதிப்பீட்டு மாதத்தில் மொத்த இரு சக்கர வாகன விற்பனை 2,69,277-லிருந்து 18.13 சதவீதம் சரிந்து 2,20,439-ஆனது. உள்நாட்டில் இரு சக்கர வாகன விற்பனை 2,28,654 என்ற எண்ணிக்கையிலிருந்து 28.71 சதவீதம் குறைந்து 1,63,007-ஆக இருந்தது.

ஜனவரியில் மொத்த வாகன ஏற்றுமதி 52,650-லிருந்து 34 சதவீதம் அதிகரித்து 70,784-ஆனது என டிவிஎஸ் மோட்டாா் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com