அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்கு தலித் உள்பட 15 அறங்காவலர்கள்: அமித் ஷா

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஸ்அறக்கடளையில் தலித் உள்பட 15 அறங்காவலர்கள் இடம்பெறுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
அயோத்தி ராமர் கோயில் அறக்கட்டளைக்கு தலித் உள்பட 15 அறங்காவலர்கள்: அமித் ஷா

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட ஸ்ரீ ராம் ஜன்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கடளையில் தலித் உள்பட 15 அறங்காவலர்கள் இடம்பெறுவார்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா புதன்கிழமை தெரிவித்தார்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு அரசாங்கத்தால் அறக்கட்டளை ஏற்படுத்தப்படும் என்று அதன் அரசியலமைப்பு தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மக்களவையில் அறிவித்த ஒரு மணி நேரத்தில் மத்திய அமைச்சர் அமித் ஷா, அறங்காவலர்கள் தொடர்பான அறிவிப்பை தனது சுட்டுரைப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அறக்கட்டளை அமைத்து சமூக நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் "இதுபோன்ற முன்னோடியான முடிவுக்கு" பிரதமர் நரேந்திர மோடிக்கு வாழ்த்து தெரிவித்தார்.

பல நூற்றாண்டுகளாக பல லட்சம் மக்களின் காத்திருப்பு விரைவில் முடிந்துவிடும். ஸ்ரீ ராமருக்கு அவரது பிறந்த இடத்தில் இடம்பெறவுள்ள கோயிலிலில் அனைவரும் விரைவில் வணங்க முடியும் என்று நான் முழுமையாக நம்புகிறேன். இந்த அறக்கட்டளை கோயில் தொடர்பான ஒவ்வொரு முடிவையும் சுயாதீனமாக எடுக்கும். கோயில் அமையுவுள்ள 67 ஏக்கர் நிலமும் அறக்கட்டளைக்கு மாற்றப்படும் என்று அமித் ஷா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com