மனைவிக்கு குடும்ப நீதிமன்றத்தில் முத்தலாக் கொடுத்த கணவர்!

தனது மனைவிக்கு மூன்று முறை 'தலாக்' கூறி விவாகரத்து செய்வதாக அறிவித்தார்.
மனைவிக்கு குடும்ப நீதிமன்றத்தில் முத்தலாக் கொடுத்த கணவர்!

முத்தலாக் சட்டத்தைப் பின்பற்ற முடிவு செய்த ஒரு தையல்காரர்,  குடும்ப நீதிமன்றத்தில் தனது மனைவிக்கு மூன்று முறை 'தலாக்' கூறி விவாகரத்து செய்வதாக அறிவித்தார். உத்திரபிரதேசத்தில் நடந்த இந்தச் சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று வழக்கு விசாரணைக்குப் பிறகு குடும்ப நீதிமன்றத்திலிருந்து வெளியே வந்த மனைவியிடம் அவர் கணவர் மூன்று முறை 'தலாக்' தலாக் தலாக் என்று கூறி, இனி நீ தனது மனைவி இல்லை’ என்று கூறினார்.

கடந்த 15 நாட்களில் உ.பி.யில் நான்காவது முத்தலாக் வழக்கு இது.

எஃப்.ஐ.ஆர் பதிவின்படி, அஃப்ரோஸ் நிஷா (30) என்பவர் பிப்ரவரி 2012-ஆம் ஆண்டில் அப்ரார் அலியை மணந்தார்.

திருமணமான உடனேயே, நிஷா தனது கணவர் மற்றும் மாமியாரால் வரதட்சணைக்காக துன்புறுத்தப்பட்டதாக குற்றம் சாட்டினார். வேறு வழியின்றி இறுதியாக பிப்ரவரி 2016-இல் வீட்டை விட்டு வெளியேறி, வரதட்சணை துன்புறுத்தல் மற்றும் வீட்டு வன்முறைகளுக்காக மோகன்லல்கஞ்ச் காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தார்.

குடும்ப நீதிமன்றத்தில் இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

வெள்ளிக்கிழமை, அவர்கள் நீதிமன்ற அறையை விட்டு வெளியேறும்போது, ​​அவரது கணவர் தனக்கு  முத்தலாக் கொடுத்தார் என்று நிஷா கூறினார்.

இதற்கிடையில், அப்ரார் அலி, "நான் நீதிமன்றத்திற்குச் சென்றேன், மார்ச் மாதத்தில் ஒரு தேதி கிடைத்துள்ளது. நான் என் மனைவியை நீதிமன்றத்தில் பார்க்கவில்லை. அவர் கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யானவை" என்றார்.

"முஸ்லீம் பெண்கள் (திருமண உரிமைகள் பாதுகாப்பு) சட்டம், 2019-இன் பிரிவுகளின் கீழ் நிஷாவின் புகாரின் பேரில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்துள்ளோம், அதன்படி நடவடிக்கை எடுப்போம்" என்று வஜீர்கஞ்ச் எஸ்.எச்.ஓ தீபக் துபே கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com