வாரணாசிக்குச் செல்கிறார் பிரியங்கா காந்தி

கோவர்த்தன்பூர் மடத்தில் நடைபெறும் ஸ்ரீகுரு ரவிதாஸ் பிறந்தநாள்  விழாவில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று வாரணாசி செல்கிறார். 
வாரணாசிக்குச் செல்கிறார் பிரியங்கா காந்தி

கோவர்த்தன்பூர் மடத்தில் நடைபெறும் ஸ்ரீகுரு ரவிதாஸ் பிறந்தநாள்  விழாவில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி இன்று வாரணாசி செல்கிறார். 

பிரதமர் நரேந்திர மோடியின் மக்களவைத் தொகுதியான வாரணாசிக்கு  காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி செல்கிறார். 

முன்னதாக, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராடியவர்களை சந்திக்க பிரியங்கா காந்தி சென்ற நிலையில் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக கோவர்த்தன்பூர் மடத்தில் நடைபெறும் ஸ்ரீகுரு ரவிதாஸ் பிறந்தநாள் விழாவில் பங்கேற்கும் பொருட்டு இன்று அவர் வாரணாசி செல்கிறார். தொடர்ந்து, அங்குள்ள மக்களை சந்திப்பதோடு, காங்கிரஸ் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com